Advertisment

போஸ்ட் கார்டில் போராடும் பா.ஜ.க.!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு விருதுநகர் மாவட்ட பாஜக சார்பில் விநாயகர் சதுர்த்தி வாழ்த்து அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. கரோனா பரவல் காரணமாக, பொது இடங்களில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடத்தடைவிதிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் இந்த நடவடிக்கைக்கு, பா.ஜ.க.வினரும், இந்து அமைப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அவர்களின் குமுறல் என்னவென்றால் – பிற மதத்தினரின் பண்டிகைகளுக்கு வாழ்த்து தெரிவிக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், விநாயகர் சதுர்த்தி விழாவை விடுமுறை தின வாழ்த்து எனச் சொல்கிறாரே என்பதுதான்.

Advertisment

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, 10 லட்சம் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகளை பாஜகவினர் மு.க.ஸ்டாலினுக்கு அனுப்பவேண்டும் எனத் தெரிவித்திருந்த நிலையில், விருதுநகர் மாவட்டத்தில், பா.ஜ.க. கிழக்கு மாவட்ட தலைவர் கஜேந்திரன் தலைமையில், விநாயகர் சதுத்தி வாழ்த்தை, திமுக தலைவர் எனக் குறிப்பிட்டு போஸ்ட் கார்டில் அனுப்பி போராட்டத்தைத்துவக்கியிருக்கின்றனர்.

Advertisment

vinayagar chaturthi
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe