“Congratulations on fulfilling expectations and providing good governance” - Ramadoss

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் 70வது பிறந்தநாள் இன்று. அவருக்கு பல்வேறு தரப்புகளில் இருந்து வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் ஆகியோர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தங்களது வாழ்த்தை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Advertisment

அதில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது; “தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் 70-ஆம் பிறந்தநாளில், அவர் நல்ல உடல் நலத்துடன் நூறாண்டு வாழ வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். அனைத்து தரப்பினரின் நியாயமான எதிர்பார்ப்புகளை நிறைவேற்றி நல்லாட்சி வழங்கிட வாழ்த்துகள்” என்று தெரிவித்துள்ளார்.

Advertisment

“Congratulations on fulfilling expectations and providing good governance” - Ramadoss

அதேபோல் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், “இன்று 70-ஆம் பிறந்தநாள் காணும் தமிழ்நாடு முதலமைச்சரும், தி.மு.க தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். அவரது பொதுவாழ்வு பணி தொடர வாழ்த்துகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.