
விருதுநகர் மாவட்டத்தில் முதல் முறையாக சாதி, மதம் இல்லாதவர்கள் என்று சான்றிதழ் வாங்கிய தம்பதிக்கு பாராட்டுகள் குவிகின்றன.
தேவர்குளம் பஞ்சாயத்து பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பவரும், அவரது மனைவி சர்மிளாவும் சாதி, மதம் இல்லாதவர்கள் என்று சான்றிதழ் வேண்டி விண்ணப்பித்திருந்தனர். இந்த நிலையில், அதற்கான சான்றிதழ் அவர்களுக்கு வழங்கப்பட்டது. இந்தியாவிலேயே இதுவரை ஏழு பேர் சாதி, மதம் இல்லாதவர்கள் என்ற சான்றிதழ் பெற்றிருக்கும் நிலையில், அதில் ஆறு பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்.
தங்களைப் போன்று தங்களது குழந்தைகளுக்கும் சாதி, மதம் இல்லாதவர்கள் என்று சான்றிதழ் கிடைக்க விண்ணப்பிக்க இருப்பதாக கார்த்திகேயன் தெரிவித்தார்.