/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/mks33322_0.jpg)
2021 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பாராட்டு விழா இன்று (20/11/2021) மாலை 05.30 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். அதேபோல், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் டோனி, ஐபிஎல் தலைவர் பிரிஜேஷ் படேல், பி.சி.சி.ஐ.யின் செயலாளர் ஜெய் ஷா, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவர் என்.சீனிவாசன், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் மற்றும் தமிழ்நாடு அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
விழாவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர்களுக்கு பரிசுகளை வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டினார். மேலும், தமிழ்நாடு முதலமைச்சருக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சார்பில் நினைவு பரிசு வழங்கப்பட்டது. அதேபோல், கேப்டன் மகேந்திர சிங் டோனிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் நினைவு பரிசு வழங்கினார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)