Advertisment

அண்ணன் ரஜினிகாந்த் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் - நெக்குறுகிய கேப்டன்!

m,

Advertisment

டெல்லியில் விஞ்ஞான் பவனில் இன்று 67வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் தமிழ்த் திரையுலகைச் சேர்ந்தவர்களும் விருதுகளைப் பெற்றனர். திரைப்படத்துறையில் வாழ்நாள் சாதனை புரிந்ததற்காக நடிகர் ரஜினிகாந்துக்கு தாதாசாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது. இதற்கு முன்பு தமிழில் எல்.வி. பிரசாத், நடிகர் சிவாஜி கணேசன், இயக்குநர் கே. பாலச்சந்தர் ஆகியோருக்கு வழங்கப்பட்ட நிலையில், இம்முறை ரஜினிகாந்துக்கு இந்த விருது வழங்கப்பட்டது.

இந்த விருது தொடர்பாக கருத்து தெரிவித்திருந்த முதல்வர் மு.க ஸ்டாலின், திரையுலகின் சூரியன் என்று நடிகர் ரஜினிகாந்துக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார். இந்நிலையில், தேமுதிக தலைவர் விஜயகாந்த் நடிகர் ரஜினிகாந்த் அவர்களுக்கு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், " இந்திய திரையுலகினருக்கு மத்திய அரசினால் வழங்கப்படும் மிக உயரிய விருதான, தாதா சாகேப் பால்கே விருது பெற்ற அண்ணன் திரு.ரஜினிகாந்த் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.

Dmdk vijayakanth rajini vijay rajini
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe