Skip to main content

மு.க.ஸ்டாலின் விடுக்கும் தெலுங்கு, கன்னட புத்தாண்டு வாழ்த்துச் செய்தி!

Published on 17/03/2018 | Edited on 17/03/2018
happy

 

தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் விடுக்கும் தெலுங்கு, கன்னட புத்தாண்டு - உகாதி திருநாள் வாழ்த்துச் செய்தி!

 

’’இனிமையாகவும், இதய பூர்வமாகவும் கொண்டாடும் உகாதி புத்தாண்டு திருநாளை (18.3.2018) முன்னிட்டு தெலுங்கு, கன்னட மொழிகள் பேசும் மக்கள் அனைவருக்கும் எனது உளம் கனிந்த புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். அண்டை மாநில மக்களுடன்
தொன்று தொட்டு அன்பும், பண்பும் மிக்க மனித நேய உறவை தமிழக மக்கள் போற்றிப் பாதுகாத்து வருகிறார்கள். அந்த தொப்புள்கொடி திராவிட வரலாறு என்றைக்கும் தொடர வேண்டும் என்ற நோக்கத்துடன் உகாதி திருநாளை அனைவரும் மிக்க மனநிறைவுடன் கொண்டாடி மகிழ்ந்திட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

 

திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியிலிருந்த போதெல்லாம் அண்டை மாநிலங்களுக்கு இடையிலான உறவினை பாதுகாத்து, நல்லுறவு நீடிக்க வேண்டும் என்ற உயரிய சிந்தனையோடு சிறப்பாக செயல்பட்டிருக்கிறது. பெங்களூரில் அய்யன் திருவள்ளுவர் சிலை, சென்னையில் கன்னட மொழிக் கவிஞர் சர்வக்ஞர் சிலை ஆகியவற்றை தலைவர் கலைஞர் அவர்கள் முதல்வராக இருந்த போது திறந்து வைத்து அண்டை மாநிலங்களுக்குள் நிலவி வருகின்ற நல்லுறவுக்கான மிக முக்கியமான அடையாளங்களை உருவாக்கியதை இந்த நேரத்தில் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

 

அதே போல் உகாதி திருநாளுக்கான அரசு விடுமுறையை அதிமுக அரசு ரத்து செய்தாலும், 2006-ல் கழக அரசு அமைந்தவுடன் அந்த புத்தாண்டு தினத்திற்கு அரசு விடுமுறை அளித்து தெலுங்கு, கன்னடம் பேசும் மக்களின் இதயத்தில் பால்வார்த்த அரசு திராவிட முன்னேற்றக் கழக அரசு. அதுமட்டுமின்றி, தெலுங்கு, கன்னட மொழிகள் பேசும் மாணவர்கள் கல்வி கற்பதற்கு
உதவியாக பாட நூல்களை தமிழக அரசே தயாரித்து வழங்கி, தெலுங்கு, கன்னட மொழி மாணவ, மாணவிகளும் கல்வியில் முன்னேற வேண்டும் என்ற தீர்க்கதரிசனத்தோடு திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான அரசு என்பதை நினைவுபடுத்தி, தமிழகத்தில் வாழும் தெலுங்கு, கன்னட மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் மீண்டும் எனது அன்பான உகாதி திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். அண்டை மாநிலங்கள் அனைவரும் ஒரே குடும்பமாக ஒருவருக்கொருவர் பாசமும் நேசமும் காட்டி, ஒவ்வொருவர் முன்னேற்றத்திற்கும் பரந்து விரிந்த மனப்பான்மையுடன் உதவிக்கொண்டு, பாரம்பரியமிக்க திராவிட குடும்பத்தின் உறவை தொய்வின்றி தொடருவோம் என்றுஅனைவரையும் இந்த உகாதி திருநாளில் மிகுந்த பாசத்துடனும், பற்றுடனும் வாழ்த்துகிறேன்.’’

சார்ந்த செய்திகள்

Next Story

‘ஈடு செய்ய முடியாத இழப்பு’ - முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்வீட்

Published on 15/11/2022 | Edited on 15/11/2022

 

 'Irreparable loss'-MK Stalin's tweet

 

தெலுங்கு திரையுலகில் பிரபலம் வாய்ந்த பழம்பெரும் நடிகர் கிருஷ்ணா காலமானார். 80 வயதான கிருஷ்ணா இதுவரை 325 திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் நடிகர் மகேஷ்பாபுவின் தந்தையாவார். உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் மாரடைப்பு ஏற்பட்டு நடிகர் கிருஷ்ணா காலமானார்.

 

ஏற்கனவே நடிகர் கிருஷ்ணாவின் மூத்த மகன் ரமேஷ்பாபு இந்த ஆண்டு ஜனவரி மாதம் மாரடைப்பால் உயிரிழந்தார் என்பதும், அதேபோல அவரது மனைவி இந்திராதேவி வயது மூப்பு காரணமாக ஒன்றரை மாதங்களுக்கு முன்புதான் உயிரிழந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. பழம்பெரும் நடிகர் உயிரிழப்பால் தெலுங்கு ரசிகர்கள், திரையுலகப் பிரபலங்கள் சோகத்தில் உள்ளனர்.

 

 'Irreparable loss'-MK Stalin's tweet

 

பல்வேறு பிரபலங்களும் தெலுங்கு நடிகர் கிருஷ்ணாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இது தொடர்பாக வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், 'பழம்பெரும் தெலுங்கு நடிகர் கிருஷ்ணா மறைவு வேதனை அளிக்கிறது. கிருஷ்ணாவை இழந்து வாடும் மகேஷ்பாபு மற்றும் அவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல். நடிகர் கிருஷ்ணாவின் மறைவு இந்தியத் திரையுலகிற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு' எனத் தெரிவித்துள்ளார்.

 

 

 

 

Next Story

பழம்பெரும் தெலுங்கு நடிகர் கிருஷ்ணா காலமானார்

Published on 15/11/2022 | Edited on 15/11/2022

 

Legendary Telugu actor Krishna passed away

 

தெலுங்கு திரையுலகில் பிரபலம் வாய்ந்த பழம்பெரும் நடிகர் கிருஷ்ணா காலமானார். 80 வயதான கிருஷ்ணா இதுவரை 325 திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் நடிகர் மகேஷ்பாபுவின் தந்தையாவார். உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் மாரடைப்பு ஏற்பட்டு நடிகர் கிருஷ்ணா காலமானதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

 

உடல்நலக்குறைவு காரணமாக நடிகர் கிருஷ்ணா ஹைதராபாத்தில் உள்ள பிரபல மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அதன் பிறகு அவசர சிகிச்சைப் பிரிவில் சிபிஆர் சிகிச்சை கொடுக்கப்பட்டது. பின்னர் வென்டிலேட்டர் சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து மருத்துவர்கள் கிருஷ்ணாவின்  உடல்நிலை குறித்து அறிக்கை வெளியிட்டு வந்தனர்.

 

இந்த நிலையில் இன்று அவர் உயிரிழந்ததாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது. ஏற்கனவே நடிகர் கிருஷ்ணாவின் மூத்த மகன் ரமேஷ்பாபு இந்த ஆண்டு ஜனவரி மாதம் மாரடைப்பால் உயிரிழந்தார் என்பதும், அதேபோல அவரது மனைவி இந்திராதேவி வயது மூப்பு காரணமாக ஒன்றரை மாதங்களுக்கு முன்புதான் உயிரிழந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. பழம்பெரும் நடிகர் உயிரிழப்பால் தெலுங்கு ரசிகர்கள், திரையுலகப் பிரபலங்கள் சோகத்தில் உள்ளனர்.