sr

விஜய் நடித்துள்ள சர்கார் படம் தீபாவளி திருநாளை முன்னிட்டு நாளை திரைக்கு வருகிறது. இதை முன்னிட்டு காஞ்சிபுரம் மாவட்டம் கூடுவாஞ்சேரியில் உள்ள விக்னேஷ்வரா திரையரங்கில் ரசிகர்கள் டிக்கெட் முன்பதிவு செய்வதற்காக திரண்டனர். ரசிகர்கள் கூட்டம் அளவுக்கு அதிகமாக இருந்ததால் டிக்கெட் வாங்குவதில் தள்ளுமுள்ளு ஏற்பட்டு மோதல் உருவானது. அசம்பாவீதம் ஏற்பட்டுவிடும் சூழல் நிலவியதால் அங்கே பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், ரசிகர்கள் மீது தடியடி நடத்தினர். இதனால் மோதலில் ஈடுபட்ட ரசிகர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர்.

Advertisment

ssssrrr