Advertisment

சூதாட்ட கும்பலுக்குள் ஏற்பட்ட மோதல்! இன்ஸ்பெக்டருக்கு நேர்ந்த அவலநிலை!  

Conflict within the gambling gang! Tragedy for the inspector

Advertisment

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி பகுதியைச் சேர்ந்த பைனான்சியர் ஞானசேகரன் என்பவர் தனது நண்பர் பாலாஜி, சிவக்குமாருடன் வீட்டிற்கு காரில் சென்றுகொண்டிருந்தார். வாணியம்பாடி அருகே வளையாம்பட்டு பகுதி சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை ரயில்வே மேம்பாலத்தின் மீது சென்றுகொண்டிருந்தனர். அப்போது அவர்களைப் பின்தொடர்ந்து மற்றொரு காரில் வந்த 4 பேர் கொண்ட கும்பல், திடீரென ஞானசேகரன் காரை மடக்கி காரில் இருந்தவர்களை சரமாரியாக அரிவாள் போன்ற ஆயுதங்களால் தாக்கி, காரில் இருந்த 25 லட்சம் ரூபாயை எடுத்துக்கொண்டு தப்ப முயன்றனர்.

Advertisment

அந்த சமயம் இரு கார்களில் இருந்தவர்களுக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டு, கார் கண்ணாடி உடைந்தது. இதில் ஞானசேகரனின் நண்பர் ஒருவர் கொள்ளையர்கள் பயன்படுத்திய காரில் இருந்த சாவியை எடுத்து மேம்பாலத்தில் இருந்து 100 அடி பள்ளத்தில் வீசியுள்ளார். இதனால் கொள்ளையர்களால் காரில் தப்பமுடியாமல் அங்கிருந்து பணத்துடன் நடந்து தப்பித்தனர். சம்பவம் குறித்து ஞானசேகரன் வாணியம்பாடி கிராமிய காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்துள்ளார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு கிராமிய போலீஸார், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சிபி சக்கரவர்த்தி தலைமையில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.

Conflict within the gambling gang! Tragedy for the inspector

கொள்ளையர்கள் பயன்படுத்திய காரில் வழக்கறிஞர் என்று ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தது. மேலும் கார் பதிவெண்ணை பார்த்தபோது அதில் கர்நாடகா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் கொண்ட 2 பதிவு எண்கள் பொருத்திய நம்பர் பிளேட் இருந்தது. மேலும், காருக்குள் பான்கார்டு, ஆதார் அட்டைகள் மற்றும் ஆயுதப்படை காவலர்கள் பயன்படுத்தும் தொப்பி உள்ளிட்டவை இருந்ததைக் கைப்பற்றினர். முதற்கட்ட விசாரணையில் ஞானசேகரன் குடியாத்தம் பகுதியில் சூதாட்டத்தில் ஈடுபட்டுவந்ததாகவும் அதில் வெற்றிபெற்ற பணம் சுமார் 25 லட்சம் ரூபாய் கொண்டுவந்ததாகவும் இதனால் ஏற்பட்ட மோதலால் பணம் 11 லட்சம் கொள்ளை போயுள்ளது தெரியவந்துள்ளது.

கொள்ளையர்கள் திருவள்ளுர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. அவர்களைப் பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில் சூதாட்ட க்ளப் நடப்பதைக் கண்டுக்கொள்ளாமல் இருந்த பேரணாம்பட்டு இன்ஸ்பெக்டர் வெங்கடேசன், ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

Inspector police thirupathur
இதையும் படியுங்கள்
Subscribe