Conflict over drug injection; Cheyyar shocked

திருவண்ணாமலையை அருகே போதை ஊசி விற்பனை தகராறில் இளைஞர் கொலை செய்யப்பட்டு வீசப்பட்டதாக கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Advertisment

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு கண்ணியம் நகர் பகுதியை சேர்ந்தவர் சரவணன். இவருடைய மகன் ஜெமினி. அந்த பகுதிமக்களால் 'சில்க்' என அழைக்கப்பட்டு வந்தார். ஜெமினி கார் டிரைவராக வேலை செய்து வந்துள்ளார். மேலும் போதைக்கு அடிமையான இளைஞர் ஜெமினி தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து கொண்டு போதை ஊசி செலுத்திக் கொள்ளும் பழக்கத்தில் ஈடுபட்டு வந்துள்ளார்.

Advertisment

இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த அக்னி என்ற இளைஞர் போதை ஊசி போட்டுக் கொள்ள ஜெமினியை அழைத்துக் கொண்டு கண்ணியம் நகர் ஓட்டியுள்ள ஏரிக்கரைக்கு சென்றுள்ளனர். அங்கு கஞ்சா மற்றும் போதைப்பொருட்களை பயன்படுத்தி விட்டு மயங்கி கிடந்துள்ளனர். அப்பொழுது சுனில், அருண்குமார், கார்த்திக், திலீப் குமார் உள்ளிட்ட ஐந்து நபர்கள் சேர்ந்து ஜெமினியை கொலை செய்து ஏரியில் வீசி விட்டு சென்றுள்ளனர். அதேநேரம் தன்னுடைய மகனை காணவில்லை என்று ஜெமினியின் தந்தை சரவணன் செய்யாறு காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் புகார் அளித்திருந்தார்.

ஜெமினி மீது ஏற்கனவே சவ ஊர்வல வாகனத்தை எரித்தது; போதை ஊசி விற்பனை என பல வழக்குகள் உள்ள நிலையில் கொலை செய்யப்பட்ட நிலையில் ஏரியில் கிடந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. போதை ஊசி விற்பனை தொடர்பாக ஏற்பட்ட மோதலில் இந்த கொலை சம்பவம் நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

Advertisment