Published on 06/09/2021 | Edited on 06/09/2021

கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற கொலை வழக்கு சம்பந்தப்பட்ட இரண்டு குற்றவாளிகள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஜூன் மாதம் பிரேம் கண்ணன், ஜாகிர் உசேன் ஆகிய இருவரும் ஜான் கண்ணன் என்பவருடன் கஞ்சா விற்பனை செய்வதில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக அவரை தொலைப்பேசியில் அழைத்து நேரில் வர வைத்து இருவரும் கொடூரமான ஆயுதங்களால் தாக்கியுள்ளனர்.
மேலும் அவர்கள் தாக்கியதில் ஜான் கண்ணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததை அடுத்து ஏர்போர்ட் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து 2 நபரையும் கைது செய்ததோடு கொலைக்குப் பயன்படுத்திய கொடூர ஆயுதங்களையும் பறிமுதல் செய்தனர். இந்நிலையில் மாநகர காவல்துறை ஆணையர் அருண் உத்தரவின் பேரில் குற்றவாளிகள் இருவரையும் குண்டர் சட்டத்தில் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.