
புதுச்சேரியில் துக்க வீட்டில் நிகழ்ந்த கலவரத்தில் நாட்டு வெடிகுண்டு வீசியதில் டிரைவர் ஒருவர் உடல் சிதறிய நிலையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி மாநிலம் முதலியார்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் ராஜ். வாகன ஓட்டுநரானராஜ் தேங்காய்திட்டு பகுதியில் உறவினர் ஒருவரின் வீட்டுத்துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்பொழுது ராஜ் வாணவெடி வெடித்துக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. அப்பொழுது அந்தப் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலருக்கும் ஓட்டுநர் ராஜுக்கும் இடையே வாணவெடி வெடிப்பதில் தகராறு ஏற்பட்டது. இந்த மோதலில் இளைஞர்கள் சிலர் நாட்டு வெடிகுண்டை ஓட்டுநர் ராஜ் மீது வீசிவிட்டுத் தப்பிச் சென்றனர். இதில் ஓட்டுநர் ராஜு சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பலியானார்.
உடனடியாக தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த முதலியார்பேட்டை காவல் நிலைய போலீசார் ராஜியின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தில் முதல் கட்டமாக இரண்டு பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். துக்க வீட்டில் நிகழ்ந்த கலவரத்தில் ஓட்டுநர் ஒருவர் நாட்டு வெடிகுண்டு வீசி கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
Follow Us