Advertisment

பொது பாதை தொடர்பாக இரு தரப்பினரிடையே மோதல்... போலீசார் குவிப்பு...

குமரி மாவட்டத்தில் பிள்ளையார்புரத்தில் கிறிஸ்தவ ஆர்ச் கட்டுவது சம்மந்தமாக இரு தரப்பினர் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

Advertisment

நாகா்கோவில் பிள்ளையார்புரத்தில் முத்தாரம்மன் கோவில் அருகில் கிறிஸ்தவ ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் நுழைவு வாயில் கட்டுவதற்காக இன்று அங்கு கிறிஸ்தவர்கள் குவிந்தனர். உடனே முத்தாரம்மன் கோவில் சம்மந்தபட்டவா்கள் அங்கு குவிந்து பொதுபாதையை மறித்து அங்கு நுழைவு வாயில் கட்டகூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் அவா்கள் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினா். இதனால் அங்கு பதட்டமான நிலை ஏற்பட்டது.

Advertisment

ஏற்கனவே 12 ஆண்டுகளுக்கு முன் இதே இடத்தில் பாதை சம்மந்தமாக இந்த தரப்பினருக்கிடையே நடந்த மோதல் கலவரமாக மாறி போலிசாரும் கலவரத்தை கட்டுபடுத்த தாக்குதல் நடத்தினார்கள். இது சம்மந்தமாக நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது. அதே போல் மீண்டும் ஒரு சம்பவம் நடந்து விடக்கூடாது என்பதற்காக 500-க்கும் மேற்பட்ட போலிசார் அங்கு நிறுத்தபட்டுள்ளனா். மேலும் போக்குவரத்தும் மாற்று பாதையில் விடப்பட்டுள்ளது. இதை தொடா்ந்து அதிகாரிகள் மத்தியில் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

incident Kanyakumari police
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe