இரு தரப்பினரிடையே மோதல்; ஆடலும், பாடலும் நிகழ்ச்சியில் கத்தி குத்து!

conflict between two parties in the Adal Padal program

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அடுத்த சீதாராமன் பட்டியில் கடந்த வெள்ளிக்கிழமை கெங்கையம்மன் திருவிழா நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக நேற்று இரவு ஆடலும் பாடலும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில்இரு தரப்பினரிடையே திடீரெனகடும் மோதல் ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் அலறியடுத்து ஓடினர்.

இந்த மோதலில் கே.வி.குப்பம் பகுதியைச் சேர்ந்த சின்னராசு, குமார் மற்றும் புருஷோத்தமன் ஆகிய மூன்று பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். கத்தி குத்துக்கு ஆளாகி காயம் பட்டவர்களை குடியாத்தம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து DSP ரவிச்சந்திரன் தலைமையில் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆடலும் பாடலும் நிகழ்ச்சியில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலினால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Vellore
இதையும் படியுங்கள்
Subscribe