Advertisment

இரு தரப்பினரிடையே கல் வீச்சு; திருவிழா மோதலில் தீவைப்பு!

 conflict between two parties; Abandoned temple festival

சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியில் உள்ள மாரியம்மன் கோவில் திருவிழாவில் இரு தரப்பினருக்கிடையே மோதல் ஏற்பட்டதால் கோவில் திருவிழா நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் அந்தப் பகுதியில் கல்வீச்சு சம்பவம்ஏற்பட்டுபரபரப்பைஏற்படுத்தியுள்ளது.

Advertisment

சேலம் மாவட்டம் ஓமலூர் வட்டம் தீவட்டிப்பட்டி கிராமத்தில் மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்றுவருகிறது. இந்நிலையில் கோவிலுக்குள் ஒரு தரப்பினர் நுழைய அனுமதி மறுத்ததால் இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதன் காரணமாக திருவிழாவானது நிறுத்தப்பட்டது. இதனால் இரு தரப்புக்கும் இடையே ஏற்பட்ட மோதலின்போது கல் வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து போலீசார் மற்றும் வட்டாட்சியர் தலைமையில் இரு தரப்பினர் இடையே நடந்த பேச்சுவார்த்தை உடன்படாத நிலையில் இந்த மோதல் சம்பவம்தொடர்ந்து வருகிறது. அதேபோல கோவிலுக்கு அருகில் உள்ள கடையில் ஒரு தரப்பு தீ வைத்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அந்தப் பகுதியில் காவல்துறையினர் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.

Advertisment
Festival Salem
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe