Advertisment

வீடு புகுந்து பெண்கள் மீது தாக்குதல்; செக்காவூரணியில் பரபரப்பு

Conflict between two factions at the festival; Home invasion; There is excitement in Chekkavuran

Advertisment

மதுரை செக்காவூரணிகோவில் திருவிழாவில் இரண்டு தரப்பினர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் ஒரு தரப்பினர் குறிப்பிட்ட நபரின் வீட்டைத்தாக்கும் காட்சிகள் வெளியாகி பரபரப்பைஏற்படுத்தி இருக்கிறது.

மதுரை மாவட்டம் செக்காவூரணி அடுத்துள்ள புளியங்குளம் கிராமத்தில் உள்ள வடக்கத்தி அம்மன் கோவிலில் புரட்டாசி உற்சவ திருவிழா கடந்த இரண்டு தினங்களாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த திருவிழாவின் பொழுது இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் ஒரு பிரிவைச்சேர்ந்த இளைஞர்கள் மற்றொரு பிரிவைச் சேர்ந்த இளைஞர்களின் வீடுகளை அடித்து நொறுக்குவதோடு பெண்களைத்தாக்கும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த சம்பவம் குறித்து செக்காவூரணி காவல் நிலைய போலீசார்,சமூக வலைத்தளங்களில் வெளியான அந்த வீடியோவை ஆதாரமாக வைத்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சுமார் பத்துக்கும் மேற்பட்டோரைகாவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருவதாகத்தகவல்கள் வெளியாகியுள்ளன.

police madurai
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe