Advertisment

வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்தநாள்; அத்துமீறிய இளைஞர்கள்.. தடியடி நடத்திய போலீஸ்

Conflict between police and youth on Veerapandiya Kattaboman

Advertisment

கரூரில் சுதந்திரப் போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்தநாளை வீரத்தமிழர் பண்பாட்டுக் கழகம் மற்றும் பல்வேறு அமைப்பினர் ஆண்டுதோறும் விமர்சையாக கொண்டாடுவது வழக்கம். கரூர் தாலுகா அலுவலகம் முன்பு தேவராட்டம் நடத்துவதற்கும், பேருந்து நிலைய ரவுண்டானா அருகில் வீரபாண்டிய கட்டபொம்மன் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தவும்போலீசார் தரப்பில் அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.

அதேசமயம், இந்த நிகழ்ச்சிக்கு இருசக்கர வாகனத்தில் ஊர்வலமாகச் செல்லத்தடைவிதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், நூற்றுக்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களில்ஏராளமான இளைஞர்கள் தடையைமீறி ஜவகர் பஜார் பகுதியில் பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையில், அதிக ஒலி எழுப்பிக்கொண்டு அதிவேகத்தில் சென்றுள்ளனர்.

அதைத்தொடர்ந்து,பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார் ஊர்வலம் நடத்தத்தடைவிதித்தனர். அப்போது பெண் போலீஸ் எஸ்.ஐ. பானுமதி, ஒரு இளைஞரின் இருசக்கர வாகனத்தில் இருந்து சாவியை எடுத்துள்ளார். இதில் கோபம் அடைந்த இளைஞர்கள் அவரை தாக்கியுள்ளனர். இதில் அவருக்கு கையில் காயம் ஏற்பட்டது.

Advertisment

அதன்பிறகு இளைஞர்களுக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பிறகு இருதரப்பினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு, அதன் விளைவாக போலீசார் கூட்டத்தைக் கலைக்கத்தடியடி நடத்தியுள்ளனர். இதனால் அப்பகுதியில் இருந்த நபர்கள் நாலாபுறமும் சிதறியடித்து தலைதெறிக்க ஓடினர். இந்தச் சம்பவத்தின் எதிரொலியாக கரூர் பேருந்து நிலையம் அருகில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாகப் பரபரப்பு ஏற்பட்டது.

karur police
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe