Advertisment

இளைஞர்களிடையே மோதல்! ஒருவர் பலி! 

Conflict among the youth! One passed away

Advertisment

கரூர் மாவட்டம் சின்னதாராபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தன்னாசியப்பன் கோவில் தெருவைச் சேர்ந்தவர்கள் அரவிந்த் (24) மற்றும் சூர்யா (20). இவர்கள் இருவரும் கடந்த சில தினங்களுக்கு முன்பு உறவினர் வீட்டு விருந்துக்கு சென்று விட்டு வீடு திரும்பும் போது அதே பகுதியைச் சேர்ந்த ஒரு இளம் பெண்ணிடம் சூர்யா கிண்டல் செய்ததாகவும், இதனை அறிந்த அவரது சகோதரர், சூர்யாவை எச்சரித்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்று அரவிந்த் மற்றும் சூர்யா ஆகிய இருவரும் இரவு ஒன்பது முப்பது மணி அளவில் சின்னதாராபுரம் பங்களா பேருந்து நிறுத்தம் அருகே நின்று கொண்டிருந்தனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேர் அரவிந்த் மற்றும் சூர்யாவையும் உருட்டுக் கட்டைகளால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில், அரவிந்தன் படுகாயம் அடைந்தார். சூர்யா காயங்களுடன் தப்பி ஓடினார்.

பின்னர், இருவரையும் மீட்டு கரூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அரவிந்த் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். சூர்யா அதே மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் அறிந்த சின்னதாராபுரம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும், உயிரிழந்த அரவிந்த் உடலை உடற்கூறு ஆய்வுக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது தொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisment

இச்சம்பவத்தில் கொலை செய்யப்பட்ட அரவிந்த் அந்தப் பெண்ணின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது. இளம் பெண்ணை கிண்டல் செய்த விவகாரத்தில் இளைஞர் அடித்து கொலை செய்யப்பட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

police karur
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe