
குற்றாலம் பகுதியில் அசைவ உணவுக் கடைகளில் கலர் பொடி போட்டு இறைச்சிகள் பொரித்து வைக்கப்பட்ட நிலையில் உணவுக் கலப்படத்தடுப்புப் பிரிவு அதிகாரிகள் அதனைப் பறிமுதல் செய்தனர்.
தென்காசி மாவட்டம் குற்றாலம் சத்தியா'ஸ் வீட்டு உணவகம் என்ற உணவகத்தில் நேற்று உணவுக் கலப்படத்தடுப்புப் பிரிவு அதிரடியாகச் சோதனை செய்தது. உணவுக் கலப்படத்தடுப்புப் பிரிவு அதிகாரி நாக சுப்பிரமணியன் தலைமையில் இந்த சோதனையானது நடைபெற்றது. அப்பொழுது அந்தக் கடையில் கலர் பொடிகள் போடப்பட்டுப்பொரிக்கப்பட்ட மீன், கோழி இறைச்சிகள் விற்பனைக்கு வைக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக அவற்றைப் பறிமுதல் செய்த அதிகாரி, பினாயில் கொண்டு அவை அனைத்தையும் ஒன்றாக ஒரு கூடையில் கொட்டி அழித்ததோடு, கடை ஊழியர்களுக்கு எச்சரிக்கை விடுத்தார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)