/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/A4063.jpg)
கோவை விமான நிலையத்தில் துப்பாக்கி தோட்டாவுடன் வந்திருந்த பெண் பயணியை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
கோவை விமானநிலையத்தில் மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் இன்று வழக்கம்போல சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது பெங்களூர் செல்லும் விமானத்தில் பயணம் செய்வதற்காக வந்தபெண் பயணி ஒருவரின் உடமைகளை போலீசார் சோதனை செய்த பொழுது அவரிடம் 9MM தோட்டா இருந்தது தெரியவந்தது. விசாரணையில் அவரது பெயர் சரளா ராமகிருஷ்ணன் என தெரியவந்தது. அவரிடம் இருந்து தோட்டாவை பறிமுதல் செய்த மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் உடனடியாக பீளமேடு காவல் துறையிடம் அவரை ஒப்படைத்தனர்.
பீளமேடு காவல்நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்ட ரம்யா ராமகிருஷ்ணனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கோவை சேர்ந்த ராமகிருஷ்ணா குழுமா அறக்கட்டளையின் அறங்காவலர் மனைவி என்று தெரிந்தது. பெங்களூருக்கு கிளம்பியபொழுது துப்பாக்கிக் தோட்டவை தெரியாமல் எடுத்து வந்ததாகத் தெரிவித்துள்ளார். இருப்பினும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)