தமிழகத்தில் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டு,தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது. இதனால் ஒரு பக்கம் தீவிர வாகனச் சோதனை என்பது தேர்தல் பறக்கும் படையினரால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பல்வேறு இடங்களில் ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்படும் பணம், பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், திருப்புத்தூரில் 3 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. திருப்பத்தூர் நாட்றம்பள்ளி அருகே சோமநாயக்கன்பேட்டை பகுதியில், 3 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வெளிமாநிலத்திற்குக் கடத்த பதுக்கி வைத்திருந்த ரேஷன் அரிசியை வருவாய்த்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.