Advertisment

கியூ பிரிவுக்கு கிடைத்த ரகசிய தகவல்! சிக்கிய கடத்தல்காரர்கள்! 

Confidential information received by the Q unit! Trapped kidnappers!

இரண்டு கோடி ரூபாய் மதிப்புள்ள திமிங்கிலத்தின் அரிய வகை அம்பர்கிரீஸ்சை விற்க முயன்ற மீனவர்கள் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

Advertisment

நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்துள்ள வெள்ளப்பள்ளம் மீனவ கிராமத்தைச் சேர்ந்தவர்கள் பாலகுரு, ஆனந்த். இவர்கள் இருவரும் கடற்கரை அருகே திமிங்கிலத்தின் அம்பர் கிரீஸைக் கண்டெடுத்துள்ளனர். இந்த அரியவகை அம்பர் கிரீஸ்சை வனத்துறையினரிடம் ஒப்படைக்காமல் அதனை வீட்டிற்கு எடுத்துச் சென்று பதுக்கிவைத்துக்கொண்டு, வெள்ளப்பள்ளம் அருகே வியாபாரியை வரவழைத்து அம்பர்கிரீஸை விற்க முயற்சி நடப்பதாக நாகை கியூ பிரிவு போலீசாருக்குத் தகவல் கிடைத்தது.

Advertisment

Confidential information received by the Q unit! Trapped kidnappers!

இதையடுத்து குற்றப் புலனாய்வுத்துறை காவல் துணை கண்காணிப்பாளர் சிவசங்கர் தலைமையில் சென்ற கியூ பிரிவு போலீசார், திமிங்கிலத்தின் அம்பர்கிரீஸை விற்க முயன்ற வெள்ளப்பள்ளத்தைச் சேர்ந்த இருவரையும் பிடித்தனர். அப்போது அவர்களின் பையிலிருந்து சுமார் 2 கோடியே 3 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 2 கிலோ எடையுள்ள திமிங்கலத்தின் அரியவகை அம்பர்கிரீஸ் இருப்பது தெரியவந்தது. அதனைப் பறிமுதல் செய்த போலீசார், சட்டவிரோதமாக அம்பர்கிரீஸ்சை வியாபாரியிடம் விற்க முயன்ற வெள்ளப்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் இருவரையும் கைது செய்தனர். இதுகுறித்து வழக்குப் பதிவுசெய்ததோடு தப்பி ஓடிய வியாபாரியையும் தேடிவருகின்றனர்.

கடல்வாழ் திமிங்கிலத்தின் உமிழ்நீரானஅம்பர்கிரீஸ் என்பதுவாசனை திரவியங்களுக்கும்மதுபானங்களுக்கும்மருத்துவத்துக்கும் பயன்படுத்தப்பட்டுவருகிறது. இதனுடைய மதிப்பு பல கோடி இருப்பதாலும், இதற்கு மார்க்கெட்டில் தனி மவுசாக இருப்பதாலும் இதனைக் கடத்துவதில் ஆர்வம் காட்டுகின்றனர் கடத்தல்காரர்கள்.

Nagapattinam
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe