Advertisment

காவல்துறைக்கு கிடைத்த ரகசியத் தகவல்! வசமாக சிக்கிய நபர்! 

Confidential information obtained by the police! Comfortably stuck person!

Advertisment

போதை பொருட்களானகுட்கா, கஞ்சா போன்றவற்றிற்குதமிழ்நாட்டில் தடை விதித்துள்ளது தமிழ்நாடு அரசு. இருந்தபோதிலும் பல்வேறு இடங்களில் இந்தபோதைப் பொருட்கள் தமிழ்நாட்டில் கள்ளத்தனமாக விற்கப்பட்டு வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த தமிழ்நாடு காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், திருச்சி மாவட்டம், மல்லியம்பத்து பஞ்சாயத்துக்குட்பட்ட ஆளவந்தநல்லூர் பகுதியில் உள்ள ஒரு குடோனில் குட்கா பதுக்கி வைத்திருப்பதாக சோமரசம்பேட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து அந்த குடோனுக்கு விரைந்து சென்ற சோமரசம்பேட்டை உதவி ஆய்வாளர் கார்த்திக் தலைமையிலான காவலர்கள் 166 கிலோ குட்காவை பறிமுதல் செய்தனர். இந்த குட்காவை பதுக்கி வைத்திருந்த ஜாகிர் உசேன் என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

trichy
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe