கோவையில் இரு சக்கர வாகனங்களைத் திருடி வந்த 17 வயது சிறுவன் உட்பட இருவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
இரு சக்கர வாகனங்களில் பூட்டை உடைப்பது எப்படி என யூடியூப் பார்த்துக் கற்றுக் கொண்டது காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளது. தொடர் புகார்களின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்ட போது, இடையர்பாளையத்தைச் சேர்ந்த ஜீவானந்தம் மற்றும் 17 வயது சிறுவனும் பிடிபட்டனர்.
யூடியூப் இணையத்தளத்தைப் பார்த்து திருடக் கற்றுக் கொண்ட இருவரும் 11 இரு சக்கர வாகனங்களைத் திருடியது தெரிய வந்தது. இதில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றன.