Advertisment

ஜல்லிக்கட்டு வழக்குகளை ரத்து செய்யக்கோரி மாநாடு! - முகிலன் அறிவிப்பு!

Conference will be held to cancel the Jallikattu cases .. Mugilan interview

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பங்கேற்றவர்கள் மீதான வழக்குகளை ரத்துசெய்ய வலியுறுத்தி, ஜல்லிக்கட்டு போராட்ட வழக்கு முறியடிப்புக் குழு சார்பில் கோரிக்கை மாநாடு நடைபெறும் என்றும், அதில், சு.வெங்கடேசன் எம்பி, உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஹரி பரந்தாமன், மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி ஆகியோர் பங்கேற்பார்கள் என்றும் சூழலியல் போராளி முகிலன்செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

Advertisment

செய்தியாளர்களைச் சந்தித்த முகிலன், “கடந்த 2017ஆம் ஆண்டு மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்ட179 பேர் மீது தொடரப்பட்ட வழக்கை ரத்துசெய்ய வேண்டும். தமிழகத்தில் நடைபெறக்கூடிய ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலப்பின காளைகளுக்கு அனுமதி வழங்கக்கூடாது.

Advertisment

ஜல்லிக்கட்டு வழக்கு தொடர்பான ராஜேஸ்வரன் ஆணையத்தின் விசாரணை அறிக்கையை உடனடியாக வெளியிட வேண்டும். அதனை வெளியிடக் கோரி கோரிக்கை மாநாடு ஒன்றை ஜல்லிக்கட்டு போராட்ட வழக்கு முறியடிப்புக் குழு சார்பில், கே.கே.நகர் தனியார் மண்டபத்தில் நடைபெறும்” எனத்தெரிவித்தார்.

இந்த மாநாட்டில் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஹரி பரந்தாமன், மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளதாகவும் தெரிவித்தார். ஜல்லிக்கட்டு போட்டிக்காக போராடிய நபர்கள் 3 ஆண்டு காலமாக நீதிமன்ற விசாரணைக்காக அலைந்து கொண்டுள்ளனர். 10க்கும் மேற்பட்ட வழக்குகளைப் பதிவுசெய்து கொடுமைப்படுத்தி வருவதாகவும்,போராட்டக்காரர்களிடம் இருந்துபறிமுதல் செய்த, லேப்டாப், செல்ஃபோன் போன்றவிலையுயர்ந்தபொருட்களை, திரும்பக் கொடுக்காமல் 3 ஆண்டு காலமாக வைத்திருப்பதாகவும் குற்றச்சாட்டு தெரிவித்தார்.

கலப்பின காளைகளை அனுமதிப்பதன் மூலம் பாரம்பரிய காளைகள் அழிய வாய்ப்புள்ளதாகவும்,ஜல்லிக்கட்டு போட்டியில் கலப்பின காளைகள் பங்கேற்பது தொடர்பாக ஜல்லிக்கட்டு கமிட்டி முடிவுசெய்யும் என மதுரை ஆட்சியர் கூறியதால் உள்ளூரில் சண்டை ஏற்படும் நிலைமையை உருவாக்கி உள்ளதாகவும், கலப்பின காளைகள் பங்கேற்பது தொடர்பாக அரசு தெளிவான முடிவை எடுக்க வேண்டும்" என்றுகூறினார்.

jallikattu
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe