சீமான் தலைமையில் மாநாடு; ஆடு, மாடுகள் பங்கேற்பு!

mdu-ntk-cattle

ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளுக்கு மேய்ச்சல் உரிமையை முறையாக வழங்கக் கோரி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் மதுரை மாவட்டம் மதுரை - சிவகங்கை மாவட்ட எல்லையான விராதனூர் பகுதியில் மாநாடு நடைபெற்று வருகிறது. இதற்காக சுமார் 2000 கிடை மாடுகள் மாநாட்டுத் திடல் அருகே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. வனத்துறையினருக்குச் சொந்தமான நிலத்தில் ஆடு மாடுகளை மேய்க்கக் கூடாது என்கிற தடையை நீக்க வேண்டும். 

ஆடு மாடுகளுக்கான மேய்ச்சல் உரிமையை முறையாக வழங்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் சார்பில் இந்த மாநாடு நடைபெற்று வருகிறது. அதோடு இந்த மாநாட்டில் ஆடுகளும், எருமை மாடுகளும் செம்மறி ஆடுகளும் கொண்டு வரப்பட்டுள்ளன. இந்த மாநாட்டு மேடைக்கு முன்புறமாக 2000 கிடை மாடுகள் உள்ளிட்ட  கால்நடைகள் நிறுத்தப்பட்டுள்ளன. அதற்குப் பின்பாக நாம் தமிழர் கட்சியினுடைய நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் அமரும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மாலை 6 மணிக்குத் தொடங்கிய இந்த மாநாடு இரவு 10 மணிக்கு நிறைவடைய உள்ளது விராதனூரில் ஆடு மாடுகளுக்கான மேய்ச்சல் உரிமை கோரி சீமான் தலைமையில் நடைபெற்று வரும் இந்த மாநாடு தமிழக அரசியல் வரலாற்றில் கவனம் பெற்றதுடன், முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் பார்க்கப்படுகிறது. இயற்கை விவசாயம், தற்சார்பு பொருளாதாரம், ஆடு மற்றும் மாடு மேய்த்தல் அரசு வேலை, பனை மற்றும் தென்னை மரத்தில் இருந்து கள் இறக்கும் உரிமை, தேவையற்ற நவீன வளர்ச்சி உள்ளிட்டவை குறித்து சீமான் பேசி வருவது குறிப்பிடத்தக்கது. 

cattle cows goats madurai Naam Tamilar Katchi ntk seeman
இதையும் படியுங்கள்
Subscribe