'ஒளிரும் தமிழ்நாடு' காணொளி மாநாடு... முதல்வர் தொடங்கி வைக்கிறார்...

Confederation of Indian Industry meeting tamilnadu cm palanisamy

இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில் 'ஒளிரும் தமிழ்நாடு' என்ற மாநாட்டை தமிழக முதல்வர் பழனிசாமி தொடங்கி வைக்கிறார்.

இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "நாளை (06/06/2020) காலை 11.00 மணியளவில் இந்திய தொழில் கூட்டமைப்பு 'Confederation of Indian Industry' (CII) சார்பில் நடைபெறும், "ஒளிரும் தமிழ்நாடு" என்ற காணொளி மாநாட்டினை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைக்கிறார். தலைமையுரையாற்றும் முதல்வர் பழனிசாமி தமிழ்நாட்டின் தொழில்வளம் பற்றிய கையேட்டையும் வெளியிடுகிறார். இந்த மாநாட்டில், 500- க்கும் மேற்பட்ட முன்னணி தொழில் நிறுவனங்களின் தலைமை அதிகாரிகள் கலந்துக்கொள்ள உள்ளனர். இந்த மாநாட்டில், தமிழ்நாட்டின்பொருளாதார வளர்ச்சியை மீட்டெடுக்கவும், புதிய முதலீடுகளை ஈர்த்திட எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்பட உள்ளன". இவ்வாறு அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

cii cm palanisamy Conference Tamilnadu
இதையும் படியுங்கள்
Subscribe