jkl

Advertisment

பேருந்தில் பயணித்த கோழிக்கு நடத்துனர் டிக்கெட் எடுக்க வற்புறுத்திய சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் சிவமொக்கா மாவட்டத்தில் பேருந்தில் கோழிக்குஞ்சை எடுத்துச் சென்ற குடும்பத்தினரிடம் நடத்துனர் கோழிக்குஞ்சுக்கும் டிக்கெட் எடுக்கச் சொல்லி வற்புறுத்தியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் கோழிக்கு எதற்காக டிக்கெட் எடுக்க சொல்கிறீர்கள் என்று கேட்டுள்ளார்.

இருந்தும் விடப்பிடியாக டிக்கெட் எடுத்தே ஆக வேண்டும் என்று நடத்துநர் கூறியதால் வேறு வழியில்லாமல் அவர்கள் டிக்கெட் எடுத்து பேருந்தில் பயணித்துள்ளனர். இந்த சம்பவம் தற்போது வைரலாகி வருகிறது.