/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/35_85.jpg)
அரசு பேருந்தில் பள்ளி மாணவிக்கு நடத்துநர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் இருந்து சிறமடத்திற்கு அரசு பேருந்து ஒன்று இயக்கப்பட்டு வருகிறது. இந்த பேருந்தில் பொதுமக்கள் மற்றும் ஏராளமான பள்ளி, கல்லூரி மாணவர்கள் பயணம் செய்வதை வழக்கமாக வைத்துள்ளனர்.
இந்த நிலையில் நேற்று அந்த பேருந்தில் பள்ளி மாணவி ஒருவர் பயணித்த போது, அவருக்கு பேருந்தின் நடத்துநர் சசி என்பவர் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி பள்ளிக்குச் செல்லாமல் அடுத்த நிறுத்தத்திலேயே பேருந்தில் இருந்து கீழே இறங்கியுள்ளார். பின்னர் வீட்டிற்குத் திரும்பிச் சென்ற மாணவி நடந்த சம்பவத்தைப் பெற்றோரிடம் கூற அதிர்ச்சியடைந்த அவர்கள் உறவினர்களுடன் அந்த பேருந்து மீண்டும் திரும்பி வந்தபிறகு சிறைபிடித்தனர்.
இதனைத் தொடர்ந்து நடத்துநரை மாணவியின் உறவினர்கள் கடுமையாக தாக்கினர். அதன் பின் தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், நடத்துநரை மீட்டுக் காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். அதன்பின் மாணவியின் பெற்றோர்கள் கொடுத்த புகாரின் பேரில் நடத்துநர் சசியை போக்சோ வழக்கின் கீழ் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/2026/02/28/2026-02-28t064820155z-nlogo-2026-02-28-12-18-18.jpg)