அரசுப் பேருந்தில் மாட்டிறைச்சி; நடுவழியில் இறக்கிவிட்ட நடத்துநர்

 conductor dropped government bus in the middle of the road for carrying beef

தர்மபுரி மாவட்டம்மொரத்தூர்அருகே வசித்து வரும்பாஞ்சாலம் என்றபெண்அந்த பகுதியில் சிறிய அளவில்மாட்டிறைச்சி விற்பனை செய்யும் தொழிலை மேற்கொண்டு வருகிறார்.அதோடு ஆரூருக்கும் மாட்டிறைச்சியைஎடுத்துச்சென்று விற்பனை செய்து வருகிறார். அந்த வகையில் வழக்கம் போல் தனது சொந்தஊரிலிருந்துமாட்டிறைச்சியைஎடுத்துக்கொண்டுஅரூர் செல்லும் அரசுப் பேருந்தில் ஏறியுள்ளார்.

பேருந்தில் ஏறி சில கிலோ மீட்டர் சென்ற பின் நடத்துநர்ரகு, என்னஎடுத்து வர்றீங்க... என்று கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு மாட்டிறைச்சி எடுத்துவருவதாகப்பாஞ்சாலம்பதிலளிக்க, இதெல்லாம் பேருந்தில் எடுத்து வரக்கூடாது என்று கூறிமோப்புப்பட்டிஎன்ற வனப்பகுதியில் பேருந்தை நிறுத்திபாஞ்சாலத்தை இறக்கிவிட்டுள்ளார்.

பாஞ்சாலம் அடுத்த பேருந்து நிறுத்தத்திலாவது இறக்கி விடுங்கள்; இங்கேஇறக்கிவிடாதீர்கள் என்று கேட்டுள்ளார். ஆனால் அதனையெல்லாம் கண்டுகொள்ளாத நடத்துநர்ரகு, பாஞ்சாலத்தைப்பாதியிலேயே இறக்கிவிட்டுச்சென்றுள்ளார். இதனையடுத்து பாஞ்சாலம் நடந்தே பேருந்து நிறுத்தம் சென்று வேறு பேருந்தில் ஏறிவீட்டிற்குச்சென்றுள்ளார்.

வீட்டிற்குச்சென்ற அவர், நடந்த சம்பவத்தைத் தனது உறவினர்களிடம் எடுத்துக் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் அந்த பேருந்து திரும்பி அந்த வழியாக வந்த பிறகு வழிமறித்து நியாயம் கேட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து நடந்த சம்பவம் குறித்துபோக்குவரத்து துறையில்புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் பெண் பயணியின் பாதுகாப்பை உறுதி செய்யாமல் நடுவழியில் இறக்கி விட்டதற்காக ஓட்டுநர் சசிகுமார் மற்றும் நடத்துநர் ரகு இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

dharmapuri
இதையும் படியுங்கள்
Subscribe