Advertisment

அரசுப் பேருந்தில் பெண்ணுக்கு தொல்லை; தட்டிக்கேட்ட நடத்துநர் மீது தாக்குதல்!

Conductor assaulted for warning for misbehaving with girl

தேனி மாவட்டம் பெரியகுளம் வடகரையைச் சேர்ந்த முருகபாண்டியன் தமிழ்நாடுஅரசு போக்குவரத்துக் கழகம்மதுரை மண்டலம்உசிலம்பட்டி கிளை பேருந்து பணிமனையில்நடத்துநராகப் பணியாற்றி வருகிறார். அவருடன் பேரையூர் தாலுகாகாளப்பன்பட்டியைச் சேர்ந்த பாண்டி என்பவர் ஓட்டுநராகப்பணியாற்றுகிறார். கடந்த 19 ஆம் தேதிபாபநாசத்திலிருந்து மதியம் 1.40 மணிக்கு புறப்பட்ட அரசுப்பேருந்தில் முருகபாண்டியனும்பாண்டியும் பணியிலிருந்தனர்.

Advertisment

அந்தப் பேருந்தில் ராஜபாளையத்தில்பயணிகளைஏற்றிக்கொண்டிருந்தபோது மதுபோதையில் இருந்த பயணி ஒருவர் முன்இருக்கையில் அமர்ந்திருந்த பெண்ணிடம் தகாத வார்த்தைகளைப் பேசியபடிசில்மிஷத்தில் ஈடுபட, அந்தப் பெண் கூச்சலிட்டிருக்கிறார். அந்த நபரிடம் நடத்துநர் முருகபாண்டியன்,“உனக்கு என்ன பிரச்சனை? எங்கே போகணும்? மொதல்ல டிக்கட் எடு..” என்று கூற,“அதெல்லாம் டிக்கட் எடுக்க முடியாது. நான் என்ன செய்தாலும் நீஎன்னை கண்டுக்காத..” என்று அந்த நபர் பிரச்சனை செய்திருக்கிறார்.

Advertisment

இதனைத் தொடர்ந்து,நடத்துநர், ஓட்டுநர்மற்றும் சில பயணிகள் அந்த நபரை அடுத்த பேருந்து நிறுத்தத்தில் இறக்கிவிட்டனர்.அந்தப் பேருந்து ராஜபாளையம் பழைய பேருந்து நிலையத்தில் பயணிகளைஏற்றிக்கொண்டு புறப்பட்டபோது,அந்த போதை நபரும் இன்னொரு நபரும் டூவீலரில் வந்து பேருந்தை மறித்திருக்கின்றனர்.மற்றொரு டூவீலரில் வந்த 3பேரும் சேர்ந்துகொண்டு 5 பேரும் பேருந்தில் ஏறி நடத்துநர் முருகபாண்டியனைமாறி மாறி அடித்ததோடு,பேருந்திலிருந்து கீழே இறக்கியிருக்கின்றனர்.

ஓட்டுநர் பாண்டியும் சில பயணிகளும் பேருந்திலிருந்து கீழே இறங்கி, நடத்துநர்முருகபாண்டியனைத் தாக்கிய நபர்களைச் சத்தம் போட்டுள்ளனர். அந்த நிலையிலும் அவர்கள் முருகபாண்டியனைப் பார்த்து “இன்னைக்கு நீ தப்பிச்சிட்ட. இனிமே நீ இந்த ஏரியா பக்கம் வரமுடியாது. உன்னை கொல்லாம விடமாட்டோம்..” என்றுமிரட்டிவிட்டுச் சென்றுள்ளனர். அதைத் தொடர்ந்து, நடத்துநர் முருகபாண்டியன் அளித்த புகாரின் பேரில்சக்திவேல், பாண்டியன்,முருகன், முருகானந்தம், மாரிமுத்து ஆகிய 5 பேர் மீது ஏழு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

conductor Theni
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe