Advertisment

நிபந்தனைகளை ஏற்க முடியாது; முதல்வர் நாராயணசாமிக்கு கிரண்பேடி கடிதம்

kiran peti

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி பேச்சுவார்த்தைக்காகவிதித்துள்ள 4 நிபந்தனைகளை ஏற்க முடியாது என புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி மறுத்துள்ளார்.

கடந்த 13ம் தேதி முதல் மக்கள் நலத் திட்டங்கள் தொடர்பான கோப்புகளுக்கு துணைநிலை ஆளுநர் கிரண்பேடி ஒப்புதல் அளிக்கவில்லை என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் துணை நிலை ஆளுநர் மாளிகை முன்பு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisment

இன்று மதியம் திடீரென டெல்லிநிகழ்ச்சிகளை கிரண்பேடிஒத்திவைத்துவிட்டு மதியம் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் மாளிகைக்கு திரும்பினார். அப்போது மாலை 6 மணி அளவில் போராட்ட குழுவினரை சந்திக்க வேண்டும்வைத்துள்ள கோரிக்கைகள் குறித்து பேசி முடிவு எடுக்க வலியுறுத்தப்பட்டது.ஆனால் மாலை 6 மணிவரை முதல் துணை நிலை ஆளுநர் மாளிகையில் இருந்துஎந்த தகவலும் வரவில்லை.

இந்நிலையில் தற்போது துணைநிலை ஆளுநர் கிரண்பேடி புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி ஒரு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் தான் டெல்லி வேலைகளைதங்கள் அரசியல் நோக்கத்திற்காக அனைத்து அலுவல்களையும் ஒத்திவைத்துவிட்டு தற்போது இங்கு வந்துள்ளதாகவும், புதுச்சேரியில் உள்ள ஆளுநர் மாளிகையில் எந்தவித கோப்பும் தடையாக வைக்கவில்லை என்றும், அனைத்து கோப்புகளும் உங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது என்றும், எந்த கோப்புகளும் நிலுவையில் இல்லை என தெரிவித்து பேச்சுவார்த்தை நடத்தும் இடத்தில் உங்களுடைய துறை அதிகாரிகளும் எங்களுடைய துறை அதிகாரிகளும் இருக்க வேண்டும் என்றும் நீங்களே பேச்சுவார்த்தைக்கான இடத்தை தேர்வு செய்யுங்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் புதுச்சேரி முதலமைச்சர் தேவையற்ற பிரச்சனைகள் எழுப்புவதாகவும்கிரண்பேடி குற்றம்சாட்டியுள்ளார். அதேபோல் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமிபேச்சுவார்த்தைக்காகவிதித்துள்ள 4 நிபந்தனைகளை ஏற்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.

Puducherry Narayanasamy
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe