Conditional Bail for Retired Judge Karnan - High Court

Advertisment

நீதிபதிகள் மற்றும் நீதிமன்ற ஊழியர்களை அவதூறாக பேசி சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்ட விவகாரத்தில் சென்னையை அடுத்த ஆவடி அருகே ஓய்வு பெற்ற நீதிபதி கர்ணனை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினரால் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 2ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.

தற்போது அவருக்கு நிபந்தனையுடன் கூடிய ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நிபந்தனையில் வெளியாகும் கர்ணன், சென்னையிலேயே தங்கியிருக்கவும், சாட்சிகளை கலைக்கக் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நிபந்தனைகளை மீறும்பட்சத்தில், ஜாமீன் ரத்து செய்யப்படும் என்றும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக அவர் தனது ஜாமீனில், எதிர்காலத்தில் இதுபோன்று செய்யமாட்டேன் என உத்தரவாதம் அளித்ததை ஏற்று இந்த ஜாமின் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.