/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/court ordetr54.jpg)
தி.மு.க. எம்.பி. ஆ.ராசா குறித்து அவதூறாக பேசியதாக கைது செய்யப்பட்ட கோவை பா.ஜ.க. மாநகர் மாவட்டத் தலைவர் பாலாஜி உத்தமராமசாமிக்கு நீதிமன்றம் நிபந்தனையுடன் கூடிய பிணையை வழங்கியுள்ளது.
கடந்த செப்டம்பர் 18- ஆம் தேதி பாலாஜி உத்தமராமசாமி வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, பாலாஜி உத்தமராமசாமி 15 நாட்கள் பீளமேடு காவல் நிலையத்தில் கையெழுத்திட உத்தரவிட்ட நீதிபதி, நிபந்தனையுடன் கூடிய பிணையை வழங்கினார். ஆனால் அவரை விடுதலைச் செய்யக்கோரி சாலை மறியல் மற்றும் உருவ பொம்மை எரிப்பில் ஈடுபட்டதற்காக கைதான 11 பேரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
Follow Us