Advertisment

'மன்னிப்புக்கு நிபந்தனை'-அடுத்த வீடியோ வெளியிடும் இர்ஃபான்

nn

பிரபல யூடியூபர் இர்ஃபான் தனது மனைவி வயிற்றில் வளரும் குழந்தையின் பாலினத்தை துபாயில் மருத்துவ பரிசோதனை செய்து கண்டறிந்துள்ளார். அத்தோடு தனக்குப் பிறக்கப் போகும் குழந்தையின் பாலினம் இதுதான் என்று அவரது யூடியூப் சேனலில் சமீபத்தில் அறிவித்திருந்தார். அந்த வீடியோவை இதுவரை சுமார் 20 லட்சம் பேர் பார்த்துள்ளனர்.

Advertisment

குழந்தையின் பாலினத்தை பகிரங்கமாக அறிவித்த இர்ஃபானுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. பிறக்கப்போகும் குழந்தையின் பாலினம் குறித்து அறிவித்த இர்பான் மீது சுகாதாரத்துறை மூலமாக கடும் நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டது. இது குறித்து இர்பானுக்கு விளக்கம் கேட்டு சுகாதாரத்துறை சார்பாக நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது.

Advertisment

பெண்ணின் வயிற்றில் வளரும் குழந்தையின் பாலினத்தைக் கண்டறிந்து வெளியில் சொல்பவர்கள் மீது தமிழகத்தில் ஏழு ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க சட்டத்தில் வழிவகை உள்ளது என்ற நிலையில் இர்பானுக்கு சிக்கல் அதிகரித்தது. தொடர்ந்து சர்ச்சைக்குரிய அந்த வீடியோவை யூடியூப் பக்கத்தில் இருந்து நீக்கிவிட்டதாக இர்பான் தரப்பு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் கருவில் இருக்கும் குழந்தை பாலினத்தை யூடியூப் வீடியோவில் அறிவித்ததற்கு மன்னிப்பு கோரியுள்ளார் யூடியூபர்இர்ஃபான். சென்னை டி.எம்.எஸ் வளாகத்தில் உள்ள மருத்துவ மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநர் அலுவலகத்தில் இதற்கான மன்னிப்பு கடிதத்தை அவர் வழங்கி உள்ளார். இர்ஃபானின் மன்னிப்பு கடிதத்தை ஏற்றுக் கொண்ட அதிகாரிகள் சம்பந்தப்பட்ட வீடியோவை நீக்க நிபந்தனை வைத்துள்ளனர். சிசுக்கலைப்பு குறித்த விழிப்புணர்வு காணொளியை வெளியிடுவதாகவும் அதிகாரிகளிடம்இர்ஃபான்உறுதி அளித்துள்ளார்.

tngovt Youtube irfan youtuber
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe