Advertisment

கள்ளச்சாராய விவகாரம்; தமிழக அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்!

condemns the Tamil Nadu government in the illicit liquor issue

Advertisment

கரூரில் கள்ளச் சாராயத்தைத்தடுக்க தவறிய தமிழக அரசைக் கண்டித்தும், கள் இறக்கி விற்பனை செய்ய அனுமதி கோரி தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கரூர் மாவட்ட தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் கரூர், தலைமைத்தபால் நிலையம் முன்பு கள்ளச்சாராயத்தை தடுக்காத தமிழக அரசைக் கண்டித்து, தமிழ்நாட்டில் கள்ளச்சாராயம், டாஸ்மாக் சரக்கு மரணங்களைதடுத்திட கேரளா, கர்நாடகா, ஆந்திரா, பாண்டிச்சேரி போன்ற அண்டை மாநிலங்களைப் போல தமிழ்நாட்டிலும் கள் இறக்கி விற்பனை செய்ய அனுமதிக்க கோரி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் கள்ளச்சாராயத்தை தடுக்க தவறிய தமிழக அரசைக் கண்டித்தும், தமிழகம் முழுவதும் கள்ளச்சாரத்தை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளை இழுத்து மூட வேண்டும் எனவும், தமிழ்நாட்டில் கள் இறக்கி விற்பனை செய்ய அனுமதிக்க வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பி 20-க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

karur
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe