ஹாரிஸ் ஜெயராஜ் இசை நிகழ்ச்சி; படையெடுக்கும் ரசிகர்கள் 

Concert by Harris Jayaraj; Invading fans

நந்தனம், ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் இன்னும் சற்று நேரத்தில் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் நடத்தும் இசை நிகழ்ச்சி தொடங்கவுள்ள நிலையில் ரசிகர்கள் குவிந்து வருகின்றனர்.

அண்மையில் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானின் நிகழ்ச்சியில் நிகழ்ந்த குளறுபடிகள் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில், ஹாரிஸ் ஜெயராஜ் இசை நிகழ்ச்சிக்குப் பல்வேறு நிபந்தனைகள் விதித்து அனுமதி வழங்கப்பட்டது. இசை நிகழ்ச்சிக்கு வரும் பார்வையாளர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள், சரியான இருக்கைகள், பார்க்கிங் வசதி உள்ளிட்ட விஷயங்களை இசை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் செய்திருக்க வேண்டும் என நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை விடக்கூடுதலாக டிக்கெட் விற்கக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சி ஏற்பாடுகளை 'நாய்ஸ் அன்ட் க்ரைன்ஸ்' (Noise and Grains) என்ற நிறுவனம் செய்கிறது. இன்னும் சற்று நேரத்தில் இசை நிகழ்ச்சி தொடங்கவுள்ள நிலையில், ரசிகர்கள் நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் குவிந்து வருகின்றனர். இதற்காக 5000கார்கள், 10,000இருசக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்புப் பணிக்காக அதிகப்படியான போலீசாரும் குவிக்கப்பட்டுள்ளனர்.

Chennai
இதையும் படியுங்கள்
Subscribe