Advertisment

நாளை தேர்தல்... இன்று திருட்டு... வேலூரில் வாக்குப்பதிவு இயந்திரம் பொறுத்த வந்த அதிகாரிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி...

வேலூர் மக்களவை தொகுதிக்கு நாளை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அப்பகுதியில் வாக்குச்சாவடியாக செயல்பட உள்ள பள்ளி ஒன்றில் வைக்கப்பட்டிருந்த 11 கணினிகள் மற்றும் சிசிடிவி கேமரா திருடு போயுள்ளது.

Advertisment

computers stolen in vellore school

வேலூரின் குடியாத்தம் காந்திநகர் பகுதியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் நாளை மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. நாளை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் விவிபேட் இயந்திரங்களை அந்த பள்ளியில் பொருத்துவதற்காக இன்று காலை அதிகாரிகள் அந்த பள்ளிக்கு சென்றுள்ளனர்.

Advertisment

அப்போது அங்கு தேர்தல் பணிகளை கண்காணிக்க வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காணாமல் போயுள்ளதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். இதனையடுத்து அப்பகுதியை ஆராய்ந்து பார்த்ததில், பூட்டை உடைத்து பள்ளி உள்ளே இருந்த 11 கணினிகள் திருடப்பட்டிருந்ததும் கண்டறியப்பட்டுள்ளது. இது தொடர்பாக விசரனை நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

loksabha election2019 Vellore
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe