Advertisment

கணினி விற்பனை நிறுவனத்தில் தீ விபத்து; இரண்டு பேர் உயிரிழப்பு! 

Advertisment

கணினி விற்பனை நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு பேர் உடல் கருகிப் பரிதாபமாக உயிரிழந்தனர்.

சென்னை ஆயிரம் விளக்குப்பகுதியில் உள்ள கிரீன்ஸ் சாலையில் செயல்படும் கணினி விற்பனை நிலையத்தில் தரை விரிப்பு அமைக்க வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த சதீஸ் மற்றும் கோபிநாத் ஆகியோர் சென்றுள்ளனர். பணியை முடித்துவிட்டு, இரண்டு பேரும் நேற்று (02/07/2022) இரவு அங்குள்ள அறையில் உறங்கிக் கொண்டிருந்தனர்.

இந்த நிலையில், நள்ளிரவு கணினி மற்றும் உதிரி பாகங்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்த அறையில், திடீரென தீப்பற்றிக் கொண்டது. தகவலறிந்து சென்ற தீயணைப்புத்துறையினர் நீண்ட நேரம் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். பின்னர், உள்ளே சென்றுப் பார்த்த போது, சதீஸ் மற்றும் கோபிநாத் ஆகியோர் உடல் கருகி உயிரிழந்து கிடந்தனர்.

Advertisment

மின்கசிவு காரணமாக, தீ விபத்து நேரிட்டதாக காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chennai fire service incident
இதையும் படியுங்கள்
Subscribe