Skip to main content

கணினி இயக்குநர்கள் போராட்டம்... தழிழகம் முழுவதும் 100 நாள் வேலை நிறுத்தம் 

Published on 18/06/2020 | Edited on 18/06/2020

 

Computer Operators


தமிழ்நாடு முழுவதும் ஊராட்சி ஒன்றியங்களில் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த வேலைகளுக்கான தினசரி பதிவேடுகள் மற்றும் அவர்களுக்கான சம்பளம் போன்றவற்றை இணையத்தில் பதிவேற்றம் செய்ய தமிழ்நாடு முழுவதும் 887 பேர் கணனி இயக்குனர்களாக உள்ளனர். பல வருடங்களாக வேலை செய்து வந்தாலும் ரூபாய் 12 ஆயிரம் சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது.

 

இந்த நிலையில் தங்கள் பணியை நிரந்தரம் செய்ய வேண்டும் என்று பல வருடங்களாகக் கோரிக்கை வைத்த நிலையில் கடந்த 2017 ஆம் ஆண்டு பணி நிரந்தரம் செய்ய உத்தரவு வெளியிடப்பட்டது. அந்த உத்தரவு இன்னும் நிறைவேற்றப்படாத நிலையில் கடந்த 15 ஆம் தேதி முதல், கணினி இயக்குநர்கள் வேலை நிறுத்தப் போராடடத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்களின் போராட்டம் தொடர்வதால் 100 நாள் வேலை பணியாளர்களின் விபரங்கள் கணினியில் பதிவேற்றம் செய்யப்படவில்லை. அதனால் தமிழகம் முழுவதும் இன்று சுமார் 50 லட்சம் பேர் 100 நாள் வேலை இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. 

 

மேலும் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஒவ்வொரு மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களிலும் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 

இந்தப் போராட்டம் தொடர்ந்தால் மேலும் 100 நாள் வேலைகளும் பணியாளர்களும் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கரோனா ஊரடங்கால் வேலையிழந்து தற்போது மீண்டும் வேலை நிறுத்தப்படுவதால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாகக் கூறுகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மது போதையில் ஞாயிறுகளில் நடக்கும் கொலைகள்; அதிர்ச்சியில் மக்கள்

Published on 03/10/2023 | Edited on 03/10/2023

 

  young man was passed away in drunkenness
ஆறுமுகம் - அருள் 

 

கீரமங்கலம் வேம்பங்குடி மேற்கு கிராமத்தைச் சேர்ந்த அடைக்கலம் மகன் அருள் (45). சில வருடங்களுக்கு முன்பு சென்னையில் நூற்றுக்கணக்கான கார்களுடன் பிரபலமான மாப்பிள்ளை டிராவல்ஸ் வைத்து  நடத்தியவர். ஏதோ சில காரணங்களால் சொந்த ஊருக்கு வந்து கார் ஓட்டுநராக வேலை செய்து வந்தார். ஞாயிற்றுக் கிழமை(1.10.2023) இரவு தனது உறவினரும் நண்பருமான அதே ஊரைச் சேர்ந்த செல்வம் மகன் ஆறுமுகத்துடன் கீரமங்கலம் சந்தைப்பேட்டை அருகே உள்ள டாஸ்மாக் கடையில் மது வாங்கி அருகில் உள்ள ஒரு இடத்தில் அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்தனர். அப்போது, இருவருக்கும் ஏற்பட்ட வாய்த்தகராறு முற்றியதில் ஆறுமுகம் ஒரு கத்தியால் அருளை சில இடங்களில் குத்தியுள்ளார். அவரிடம் இருந்து தப்பி ஓட முயன்ற அருளின் பின்னாலே சென்ற ஆறுமுகம் கழுத்து, தலை, முதுகு என 9 இடங்களில் குத்தியுள்ளார். இதனால் ரத்த வெள்ளத்தில் அருள் அங்கேயே சரிந்தார். 

 

இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் அருளை மீட்டு 108 ஆம்புலன்ஸில் ஏற்றி அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனைத் தொடர்ந்து அறந்தாங்கியில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அருள் மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவனைக்கு அனுப்ப தயாரானபோது சிகிச்சை பலனின்றி அருள் உயிரிழந்தார்.  இதனையடுத்து நேற்று அருளின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. 

 

இந்த நிலையில் அருளை கொலை செய்த ஆறுமுகத்தை பொதுமக்களே பிடித்து கீரமங்கலம் போலீசாரிடம் ஒப்படைத்தனர். தகராற்றில் ஆறுமுகத்திற்கு ஏற்பட்ட காயத்திற்கு சிகிச்சை அளித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைந்த்தனர். 

 

இதே போல் கடந்த சில மாதங்களுக்கு விருதுநகர் மாவட்டத்தில் இருந்து கீரமங்கலம் அருகே உள்ள கிராமங்களில் கட்டட வேலை செய்து வந்த அய்யாச்சாமி மகன் முருகன்(30), மற்றும் அவரது ஊரை சேர்ந்த முருகனின் உறவினர்களான தன்னக்குட்டி மகன் தனசேகரன்(29), தன்னக்குட்டி மகன் தங்கச்சாமி(53) உட்பட 5 பேர் கீரமங்கலம் அண்ணாநகர் கட்டிட ஒப்பந்தக்காரரான லெட்சுமணனிடம் கட்டிடத் தொழிலாளியாக வேலை செய்து வருகின்றனர்.

 

இவர்கள் மேற்பனைக்காடு கிராமத்தில் கட்டடம் கட்டும் இடத்தில் தங்கி இருந்து வேலை செய்து வந்த நிலையில் ஏப்ரம் 30 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் முருகன் தனசேகரன், தங்கச்சாமி ஆகியோர் கீரமங்கலம் வந்து மது குடித்துவிட்டு பழைய பேருந்து நிறுத்தம் அருகே நின்று பேசிக் கொண்டிருந்த போது, முருகனுக்கும் தனசேகரனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

 

அப்போது வாக்குவாதம் முற்றி தனசேகரன் அருகில் கிடந்த விறகு கட்டையை எடுத்து முருகன் மண்டையில் பலமாக தாக்கியதால் மண்டை உடைந்து ரத்தம் கொட்டிய நிலையில் கீழே சாய்ந்த முருகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அப்பகுதியில் நின்றவர்கள் தனசேகரனை பிடித்து கீரமங்கலம் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

 

அதே போல கடந்த ஆண்டு மே மாதம், கீரமங்கலம் அருகில் உள்ள மேற்பனைக்காடு குறிஞ்சி நகர் பகுதியை சேர்ந்த ரங்கசாமி மகன் அருள்(38). கீரமங்கலம் சந்தைப் பேட்டை பகுதியில் இரவு நேர உணவு விடுதி நடத்தி வருகிறார். இரவு கடை முடித்து விட்டு தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்ற போது பெட்ரோல் இல்லாமல் மோட்டார் சைக்கிள் நடுவழியில் நின்றுள்ளது. தனது நண்பரை பெட்ரோல் வாங்கி வரச் சொல்லிவிட்டு நின்ற போது அருகில் உள்ள வீட்டில் நின்ற நாய் குறைத்ததால் அருள் நாயை தாக்கியதாக கூறப்படுகிறது. 

 

 young man was passed away in drunkenness

 

இதைப் பார்த்த நாயின் உரிமையாளருக்கும் அருளுக்கும் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. அருள் அங்கிருந்து மீண்டும் கீரமங்கலம் நோக்கி சென்ற போது வேம்பங்குடி மேற்கு அண்ணாத்துரை மகன் தினேஷ் (30), கீரமங்கலம் தர்மர் கோயில் தெரு அண்ணாத்துரை மகன் மதன் (எ) சுரேஷ்குமார் (22) ஆகியோர் அருளை தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த அருள் கீரமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சை பெற்று வீட்டிற்கு சென்ற நிலையில் மயக்கமடைந்து வாந்தி எடுத்ததால் அறந்தாங்கி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். பின்பு மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டு, அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

 

கீரமங்கலத்தில் கடந்த சில மாதங்களில் டாஸ்மாக் கடைகள் அருகே, கடைவீதிகளில் ஞாயிற்றுக் கிழமைகளில் மது போதையில் அடுத்தடுத்து 3 கொலைகள் அதுவும் உறவினர்களை உறவினர்களே கொன்ற சம்பவம் தொடர்ந்து அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

 

 

Next Story

குலதெய்வம் கோவிலுக்கு வந்த குடும்பம்; குளத்தில் பறிபோன 3 உயிர்கள்

Published on 15/05/2023 | Edited on 15/05/2023

 

A family who came to the clan deity temple for prayers; 3 lives were passed away in temple itself

 

நீலகிரி மாவட்டம் ஊட்டியைச் சேர்ந்தவர்கள் விஜயகாந்த் - விஜயலட்சுமி தம்பதி. இவர்களது மகள்களான அக்க்ஷயா(15), தனலெட்சுமி (12) மற்றும் உறவினர்களுடன் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள பள்ளத்து விடுதி கிராமத்தில் அமைந்துள்ள தங்கள் குலதெய்வமான மயிலியாத்தம்மன் கோயில் கிடா வெட்டு பூஜைக்காக வந்துள்ளனர். இவர்களுடன் விஜயகாந்தின் தம்பி ஆனந்தகுமார் (29)  வந்துள்ளார்.

 

விஜயகாந்த்தின் குடும்பத்தினர் திங்கள் கிழமை மதியம் பள்ளத்திவிடுதி வந்து சேர்ந்தனர். இந்நிலையில் பயணக் களைப்பு தீர அதே கிராமத்தில் உள்ள பிள்ளையார் கோயில் குளத்தில் குளிப்பதற்காக அக்க்ஷயா மற்றும் அவரது தங்கை தனலெட்சுமி அவர்களது சித்தப்பா ஆனந்தகுமார் ஆகிய மூவரும் சென்றுள்ளனர்.

 

குளத்தில் இறங்கி குளித்துக் கொண்டிருந்த போது தனலட்சுமி தண்ணீரில் மூழ்கியுள்ளார். அவரை காப்பாற்ற அக்க்ஷயாவும் ஆனந்தகுமாரும் முயன்றுள்ளனர். அதற்குள் தனலெட்சுமி ஆழமான பகுதிக்கு சென்றுவிட்டார். தனலட்சுமியை காப்பாற்ற இவர்களும் அங்கே சென்ற போது எதிர்பாராத விதமாக மூவரும் நீரில் மூழ்கியுள்ளனர். இதனைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் மூவரையும் காப்பாற்ற முயற்சித்துள்ளனர். நெடு நேரத்திற்கு பின் மூவரையும் மீட்டு அப்பகுதி மக்கள் அவர்களை ஆலங்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். மருத்துவமனையில் அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் மூவரும் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

 

இதன்பின் மூவர் சடலங்களையும் பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து ஆலங்குடி காவல் துறையினரும் வருவாய் துறையினரும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

கோடை காலங்களில் குளம், ஏரிகளில் தண்ணீர் நிரம்பியுள்ள நிலையில் இது போன்ற துயரச் சம்பவ தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இது போன்ற சம்பவங்களை தவிர்க்க எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்கின்றனர் கிராம மக்கள். தங்களின் வேண்டுதல் நிறைவேற குலதெய்வத்தை வழிபட தொலை தூரத்தில் இருந்து வந்தவர்களுக்கு நடந்த துயர சம்பவத்தால் கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.