Advertisment

நெய்வேலியில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கணினி ஆய்வகம் திறப்பு

Computer lab opened for special students in Neyveli

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் உள்ள என்எல்சி இந்தியா நிறுவன சமூகப் பொறுப்புணர்வு திட்டத்தின் ஆதரவுடன் சினேகா வாய்ப்பு பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளி கடந்த பல ஆண்டுகளாக மாற்றுத்திறனாளி குழந்தைகள்பராமரிப்பு மற்றும் சமூக சேவைகளில் ஈடுபட்டு வருகிறது.

Advertisment

மேலும் இங்குள்ளமாற்றுத்திறனாளி குழந்தைகளின் கல்வி வளர்ச்சியை சமுதாயத்திற்கு ஏற்றவாறு மறுவாழ்வு அளிக்கும் உன்னத நோக்கத்துடன் மாற்றுத்திறனாளி மாணவர்களை இலவசமாக கவனித்து வருகிறது.இதில் தையல், பேப்பர் கவர்கள், டோர் மேட், பேப்பர் கப், டச்சு மற்றும் சமையல் போன்ற பல திறன் சார்ந்த பயன்பாடுகளில் மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

Advertisment

என்எல்சி இந்தியா நிறுவனம் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்குகணினி மென் திறன்களை வழங்குவதற்கான வசதிகளை வழங்கி உள்ளது.இதன் மூலம் அவர்கள்கணினி பற்றிய அறிவைப் பெரும் வகையில் இப்பள்ளியில் உள்ள மாற்றுத்திறனாளி மாணவர்களின் பயன்பெறும் வகையில் கணினி ஆய்வகம் திறப்பு நிகழ்ச்சி பள்ளியில் நடைபெற்றது.

இதில் இப்பள்ளியின் தலைவர்ராதிகா பிரசன்னா குமார் மோட்டு பள்ளி கலந்து கொண்டு திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் என்எல்சி இந்தியா நிறுவனத்தலைவர் மற்றும் சினேகா பள்ளியின் ஸ்தாபகர் பிரசன்னா குமார் மோட்டு பள்ளி கலந்து கொண்டு பள்ளியின் மேன்மையான வளர்ச்சிக்கு என்எல்சி இந்தியா நிறுவனம் சிறந்த பங்களிப்பை வழங்கும் என்று கூறினார்.

இந்நிகழ்ச்சியில் என்எல்சி இந்தியா நிறுவன மனிதவள இயக்குநர் சமீர் ஸ்வருப் மற்றும் மூத்த அதிகாரிகள், சினேகா வாய்ப்பு பள்ளியின் நிர்வாகப் பொறுப்பாளர்கள் பள்ளியின் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

Neyveli students
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe