கடந்த சில நாட்களாக பெய்த கனமழையில் பல்வேறு மாவட்டங்களில் ஆற்றின் தரைப்பாலம் துண்டிப்பு குறித்த செய்திகள் வெளியான நிலையில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே 25 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட தடுப்பணை உடைந்தது தொடர்பான தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் அத்தடுப்பணையின் கரைமுற்றிலும் சேதமாகியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் தளவானூரில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கடந்த ஓராண்டுக்கு முன்பு 25 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட தடுப்பணையில்தொடர் மழையால் கடந்த 9 ஆம் தேதி ஏற்பட்ட உடைப்பு காரணமாக அதன் வழியாகத் தண்ணீர் வெளியேறியது. உடைப்பு ஏற்பட்ட அன்றே தடுப்பணை பகுதியில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகன் நேரில் ஆய்வு செய்தார். இந்நிலையில் தளவானூரில் உடைந்த தடுப்பணையின் கரை முற்றிலும் சேதமடைந்து உடைந்ததால் அதிக அளவு தண்ணீர் வெளியேறி வருகிறது. இதனால் அதிகப்படியான விவசாய நிலம் பாதிக்கப்பட்டுள்ளது.