
2023 - 2024 ஆம் நிதியாண்டிற்கான தமிழ்நாடு அரசின் பொது பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்த இந்த பட்ஜெட்டில் பல முக்கிய அறிவிப்புகள் வெளியானது. இந்நிலையில் இன்று வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். இந்நிலையில் திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் தலைமையில் கட்சியின் எம்.எல்.ஏக்கள் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடக்கும் திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.