
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் சட்டமன்ற தொகுதியில் தி.முக. மாநில துணைப் பொதுச் செயலாளரும், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெரியசாமியின் முயற்சியில் சுமார் ரூ.98 கோடி மதிப்பில் ஆத்தூர் ஒன்றியத்தில் கூட்டுறவுத்துறை சார்பாக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கட்டப்பட்டு வருகிறது. இதன் கட்டிட பணிகள் முடியும் தருவாயில் உள்ளது. இதுபோல ரெட்டியார்சத்திரம் ஒன்றியத்தில் ரெட்டியார்சத்திரம் அருகே அப்பகுதி மாணவர்களின் நலன் கருதி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கொண்டுவர திட்டமிட்ட அமைச்சர் பெரியசாமி கன்னிவாடி செல்லும் சாலையில் சுமார் ரூ.13 கோடி மதிப்பில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கொண்டு வந்ததால் தற்போது அதற்கான பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது.

கன்னிவாடியில் முதல்வர் மருந்தகத்தை திறந்து வைத்த அமைச்சர் அதன் பின்னர் நேரடியாக ரெட்டியார்சத்திரத்தில் கட்டப்பட்டு வரும் கன்னிவாடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கட்டிட பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் சரவணன் உடன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதன்பின்பு ஒப்பந்தக்காரரிடம் பேசியபோது, தரைதளத்தில் எந்த மாதிரி கட்டிடங்கள் அமைய உள்ளது. மேற்தளத்தில் எத்தனை கட்டிடங்கள் உள்ளது. கன்னிவாடி சாலையில் இருந்து கல்லூரி கட்டிடத்திற்கு வரும் பாதை எவ்வாறு அமைக்கப்படுகிறது என்றதோடு கல்லூரியின் வளர்ச்சிக்கேற்ப விடுதி வசதியும் செய்து கொடுக்க இருப்பதால் அதற்கான பணிகளையும் தொடர்ந்து செயல்படுத்த வேண்டும் என உத்தரவிட்டார். பின்னர் கட்டிட பணிகள் எப்போது முடிப்பீர்கள் எனக் கேட்டபோது வரும் அக்டோபர் மாதத்திற்குள் முடித்துவிடுவோம் என்றனர்.
அதன்பின்பு அமைச்சர் பெரியசாமி கூறியதாவது, ‘வரும் ஏப்ரல் மாதத்திற்குள் ஆத்தூர் ஒன்றியத்தில் உள்ள கூட்டுறவு கலை மற்றும் அறிவியல் கல்லூரி திறக்கப்பட உள்ளது. அதன்பின்னர் இந்த கல்லூரியை இந்த வருடம் அக்டோபர் மாதத்தில் திறக்க வேண்டும். அதனால் கட்டிட பணிகளை தாமதமின்றி விரைவாக செய்யுங்கள் என்றார்.

ஆய்வின்போது கோட்டாட்சியர் சக்திவேல், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க.பொருளாளர் கு.சத்தியமூர்த்தி, தலைமை செயற்குழு உறுப்பினர் ஆத்தூர் நடராஜன், ஒன்றிய செயலாளர்கள் ப.க.சிவகுருசாமி, மணி, முன்னாள் மாவட்ட கவுன்சிலர் சுப்புலட்சுமி, மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளர் பாறைப்பட்டி வாஞ்சிநாதன், மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர் கும்மம்பட்டி விவேகானந்தன், செட்டியபட்டி விடுதலைமுருகன், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் பண்ணைப்பட்டி அருண்ஜெகநாதன், முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர்கள் காளீஸ்வரி மலைச்சாமி, நாகலெட்சுமிரமேஷ், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர்கள் ராதா, மெர்சி என்ற லெட்சுமி, சட்டமன்ற முகாம் அலுவலக அலுவலர் வட்டார வளர்ச்சி அலுவலர் வடிவேல் முருகன், பழனி தண்டாயுதபாணி கோவில் அறங்காவலர் கொம்பன் என்ற பாலசுப்ரமணி, அகரம் பேரூராட்சி மன்ற தலைவர் நந்தகோபால், கன்னிவாடி பேரூராட்சி மன்றத்தலைவர் தனலெட்சுமிசண்முகம், துணைத்தலைவர் கீதாமுருகானந்தம், அமைச்சரின் உதவியாளர் வத்தலகுண்டு ஹரிஹரன், திண்டுக்கல் மாமன்ற உறுப்பினர் நெல்லை சுபாஷ், கொத்தப்புளி ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் சுந்தரி அன்பரசு, துணை தலைவர் எம்.வி.ரெங்கசாமி, ரெட்டியார்சத்திரம் முன்னாள் நிலவள வங்கி செயலாளர் சக்கரவர்த்தி மணிமாறன், மாவட்ட பிரதிநிதி எல்லை இராமகிருஷ்ணன், காமாட்சிபுரம் கமலக்கண்ணன், இலக்கிய அணியைச் சேர்ந்த குண்டு கண்ணன், பாறைப்பட்டி டாஸ்மாக் வடிவேலு, முத்தனம்பட்டி ராஜ்குமார் உட்பட திமுக நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.