complete lockdown tn govt order coronavirus prevention

தமிழகத்தில் தளர்வுகளின்றி முழு ஊரடங்கை மேலும் ஒரு வாரம் நீட்டித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

Advertisment

தமிழகத்தில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு- எவை எவைக்கு அனுமதி? என்பது குறித்து பார்ப்போம்!

Advertisment

ஒரு வார ஊரடங்கு காலத்தில் மருந்தகங்கள், நாட்டு மருந்துக் கடைகள், கால்நடை மருந்தகம் செயல்படலாம்.

பால் விநியோகம், குடிநீர் மற்றும் தினசரி பத்திரிகை விநியோகம் செய்ய தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

Advertisment

தலைமைச் செயலகத்திலும், மாவட்டங்களிலும் அத்தியாவசிய துறைகள் மட்டும் இயங்கும்.

உணவகங்களில் காலை 06.00 மணி முதல் 10.00 மணி வரையும், நண்பகல் 12.00 மணி முதல் 03.00 மணி வரையும், மாலை 06.00 மணி முதல் இரவு 09.00 மணி வரையும் பார்சல் வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

ஸ்விகி, சொமோட்டோ போன்ற உணவு விநியோக நிறுவனங்கள் உணவக நேரத்தில் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

பெட்ரோல், டீசல் பங்க்குகள் வழக்கம் போல் இயங்கும்; ஏ.டி.எம். மற்றும் அவற்றின் சேவைகள் அனுமதிக்கப்படும்.

வேளாண் விளைப்பொருட்கள் மற்றும் இடுபொருட்களைக் கொண்டு செல்ல அனுமதிக்கப்படும்.

சரக்கு வாகனங்கள் செல்லவும், அத்தியாவசியப் பொருட்கள் கொண்டு செல்லவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தொடர் செயல்முறை ஆலை, அத்தியாவசியப் பொருள், மருத்துவ உபகரணம் தயாரிக்கும் ஆலைகள் இயங்கலாம்.

அமேசான், பிளிப்கார்ட் போன்ற மின்னணு சேவை நிறுவனங்கள் காலை 08.00 மணி முதல் மாலை 06.00 மணி வரை இயங்கலாம்.

தமிழக அரசின் இ- பதிவு நடைமுறையில் திருமணத்துக்கான அனுமதி நீக்கப்பட்டுள்ளது.

மருத்துவ காரணம், இறப்புகளுக்காக மட்டும் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பதிவுடன் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மருத்துவ காரணங்களுக்காக மாவட்டத்திற்குள் பயணிக்க இ- பதிவு தேவையில்லை.

தமிழகத்தில் ஒரு வாரத்திற்கு மளிகை, காய்கறி, இறைச்சி மற்றும் பழக்கடைகள் செயல்படாது. மக்களுக்கு தேவையான காய்கறி, பழங்கள் உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து வாகனம் மூலம் தரப்படும்.

தனியார் நிறுவனங்கள், வங்கிகள், காப்பீடு நிறுவனங்களின் ஊழியர்கள் வீட்டில் இருந்தே பணியாற்ற வேண்டும்.

செய்தி மற்றும் ஊடக நிறுவனங்கள் வழக்கம் போல் இயங்கலாம்.

இன்றும், நாளையும் மட்டும் தனியார் பேருந்துகள் மற்றும் அரசுப் பேருந்துகள் வெளியூர் செல்ல அனுமதிக்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது.

இன்று இரவு 09.00 மணி வரையும், நாளை ஒரு நாள் மட்டும் காலை 06.00 மணி முதல் இரவு 09.00 மணி வரை அனைத்து கடைகளும் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.