Advertisment

தமிழகத்தில் கடும் முழு ஊரடங்கு?- சற்று நேரத்தில் அறிவிப்பு!

complete lockdown tn govt announced soon coronavirus prevention

Advertisment

கரோனா தடுப்பு நடவடிக்கையாக, தமிழகத்தில் முழு ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பான அறிவிப்பை இன்னும் சற்று நேரத்தில் வெளியிடுகிறது தமிழக அரசு.

தமிழகத்தில் நாளை மறுநாள் முதல் ஒரு வாரத்துக்கு தளர்வுகள் அற்ற கடும் முழு ஊரடங்கு அமல்படுத்த வாய்ப்பிருப்பதாகவும், கடும் ஊரடங்கிற்கு பின்னர் இரண்டாவது வாரத்தில் தளர்வுகளுடன் ஊரடங்கு அமல்படுத்த வாய்ப்பிருப்பதாகவும் தகவல் கூறுகின்றன.

தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு வரும் திங்கள்கிழமை முதல் நீட்டிக்கப் படலாம் என்பதால், தமிழகத்தில் நாளை ஒருநாள் மளிகை, காய்கறி கடைகளைத் திறக்க தமிழக அரசு அனுமதி அளிக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

Advertisment

இதனிடையே, சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழகத்தில் ஒரு வாரம் தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும். மே 23- ஆம் தேதி முதல் மே 30- ஆம் தேதி வரை கடும் கட்டுப்பாடுகளுடன் கூடிய முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும்" என்று தெரிவித்துள்ளார்.

COMPLETE LOCKDOWN tn govt
இதையும் படியுங்கள்
Subscribe