complete lockdown coronavirus prevention doctor prabhdeep kaur tweets

Advertisment

கரோனா தடுப்பு நடவடிக்கையாக, தமிழகத்தில் நாளை (24/05/2021) முதல் ஒரு வார காலத்திற்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

complete lockdown coronavirus prevention doctor prabhdeep kaur tweets

இந்த நிலையில் தமிழக அரசின் மருத்துவ நிபுணர்கள் குழுவில் இடம் பெற்றுள்ள மருத்துவர் பிரப்தீப் கவுர் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "கரோனா பரவல், இறப்புகளைக் குறைக்க முழு ஊரடங்கு காலத்தை எவ்வாறு பயன்படுத்துவது? 1.களப்பணியாளர்கள் மூலம் கண்காணிப்பைத் தீவிரப்படுத்துதல், 2.கரோனா மருத்துவ பரிசோதனையில் ரேபிட் ஆன்டிஜென் பரிசோதனையை சேர்ப்பது, 3.கிராமப்புறங்கள் மற்றும் நகர் புறங்களில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகளைக் கூடுதலாகச் சேர்க்க வேண்டும், 4. அறிகுறிகளுடன் தனியார் துறைகளில்பணியாற்றும் பணியாளர்களைக்கண்காணித்தல், 5. முதியவர்களுக்கு மளிகை, காய்கறிகளை வீட்டிற்கே சென்று வழங்குதல். கரோனா தொற்றை கண்டறியும் பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும்" என்று தமிழக அரசுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.