/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/HELI4444.jpg)
கோவை மாவட்ட சூலூர் விமானப் படைத் தளத்தில் இருந்து Mi- 17V5 என்ற ஹெலிகாப்டர் இன்று (08/12/2021) முற்பகல் 11.47 PM மணிக்கு புறப்பட்டுச் சென்றது. இந்த ஹெலிகாப்டரில் முப்படை தலைமைத் தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உள்ளிட்ட 14 பேர் பயணம் மேற்கொண்டனர். இந்த நிலையில், நண்பகல் 12.20 மணிக்கு காட்டேரி மலைப்பகுதியில் Mi- 17V5 ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. தரையிறங்கும் பகுதிக்கு 10 கி.மீ. தொலைவில் ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்குள்ளானதாக தகவல் கூறுகின்றன.
இந்த விபத்தில் ஹெலிகாப்டரில் பயணித்த 14 பேரும் மீட்கப்பட்டதாகவும், அவர்களின் என்ன என்பது குறித்த தகவல் எதுவும் தற்போது வரை வெளியாகவில்லை. விபத்துக் குறித்து தகவலறிந்து, அந்த இடத்திற்கு சென்ற ராணுவத்தினர், காவல்துறையினர் மற்றும் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் விபத்து நடந்த இடத்தில் ஆய்வு செய்தனர். மேலும், மீட்புப் பணிகளைத் துரிதப்படுத்திய நிலையில், தற்போது மீட்புப் பணியானது முழுமையாக நிறைவடைந்ததாக தகவல் கூறுகின்றன.
இதனிடையே, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்திய விமானப் படை தளபதி உள்ளிட்டோர் குன்னூர் விரைந்துள்ளனர்.
விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர் குறித்து முழுமையான தகவல்!
முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் பயணித்த ஹெலிகாப்டர் Mi- 17V5 ரஷ்யா நாட்டின் கசன் நிறுவனத்தின் தயாரிப்பாகும். 1981-ல் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த வகை ஹெலிகாப்டர்ராணுவ போக்குவரத்துக்கு பயன்படக்கூடியது.இதில் 36 பேர் வரை பயணிக்க முடியும். உலகின் மிக உயர்ந்த தொழில்நுட்ப வசதிகளைக் கொண்டது Mi- 17V5.இந்த ஹெலிகாப்டர் மோசமான வானிலையையும் சமாளித்துப் பறக்கக்கூடிய திறன் வாய்ந்தது. இது13 ஆயிரம் கிலோ எடையைச்சுமக்கும் திறன் கொண்டது. ஒரு மணி நேரத்தில் 250 கிமீ வேகத்தில் பயணிக்ககூடிய திறன் வாய்ந்தது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)