தமிழகத்தில் இன்று இதுவரை இல்லாத அளவிற்கு ஒரே நாளில்6,988 பேருக்குகரோனாஉறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் ஒட்டுமொத்தமாககரோனாஉறுதி செய்யப்பட்டோர்எண்ணிக்கை இரண்டுலட்சத்தை கடந்திருக்கிறது.
கோவையில் நாளுக்கு நாள் கரோனாபாதிப்பு எண்ணிக்கை என்பது அதிகரித்து வருவதால், இன்றுமாலை 6 மணி முதல் 27ம் தேதி வரை 3 நாட்களுக்கு முழு முடக்கம் கடைபிடிக்கப்படும் என கோவை மாவட்ட நிர்வாகம் அறிவித்திருந்தது. அதேபோல் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கோவை மாவட்ட நிர்வாகம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் இன்று மாலை 5 மணிக்கேகோவையில் முழுமுடக்கத்தை கோவை மாவட்ட நிர்வாகம் அமல்படுத்தியுள்ளது. இன்று ஒரே நாளில்கோவையில் 270 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.