கரோனா பெருந்தொற்று பரவலைக் கட்டுப்படுத்த தற்போதுள்ள ஊரடங்கினை மேலும் ஒருவார காலத்திற்கு முழுமையாக எவ்விதத் தளர்வுகளுமின்றி தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்த நிலையில், இன்று (24.05.2021)காலை முதல் அது நடைமுறைக்குவந்துள்ளது. தமிழகத்தில் பெரும்பாலான சாலைகளில் மக்கள் நடமாட்டம் முழுவதும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அதையும் மீறி தேவையில்லாமல் சாலையில் செல்வோருக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. மளிகைக் கடைகள் உள்ளிட்ட அத்தியாவசியக் கடைகளும் முழு ஊரடங்கை முன்னிட்டு முழுவதும் மூடப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்ததால், தமிழகம் முழுவதும் அனைத்துமளிகைக் கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. பால், மருத்தகம் உள்ளிட்ட சில கடைகளுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டிருப்பதால் அந்தக் கடைகள் வழக்கம்போல் செயல்படுகிறது.