Advertisment

மருத்துவமனை பணியாளர்களுக்கு பாலியல் தொல்லை! தீவிர விசாரணை நடத்த கோரிக்கை!

ddd

சென்னை அயனாவரத்தில் உள்ள இ.எஸ்.ஐ மருத்துமனையில் கண்காணிப்பாளராக பணிபுரிந்து வருகிறார் வெங்கடமதுபிரசாத். இவர் குறித்து 12.06.2021ஆம் தேதி அன்று தேசிய பெண்கள் பாதுகாப்பு ஆணையத்திற்கு ஒரு கடிதம் சென்றுள்ளது.

Advertisment

அந்த கடிதத்தில், வெங்கடமதுபிரசாத் இ.எஸ்.ஐ மருத்துவமனை கட்டிடத்தின் உள்ளே உள்ள மத்திய அரசுக்கு சொந்தமான குடியிருப்பில் தங்கி வருதாகவும் அதே இ.எஸ்.ஐ மருத்துமனையில் பணிபுரியும் பெண்களிடம் தவறான முறையில் பேசுவதுதாகவும், சட்டத்திற்கு புறம்பாக மருத்துவமனையில் பணிபுரியவர்களை தன்னுடைய குடியிருப்பில் பணிபுரிய வைப்பதுடன், இரவு நேரங்களில் அவர்களை மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்துவருவதாகவும் அந்த வகையில் வனிதா என்ற மருத்துவமனையில் பணிபுரிய வேண்டிய பெண்ணை தன்னுடைய வீட்டிற்கு அழைத்து சென்று பணிபுரிய வைக்கிறார்.

Advertisment

வனிதாவின் தந்தை பார்வை அற்றவர் என்பதால் அந்த பெண்ணை மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்து வருகிறார் என்றும், இது தொடர்பாக வேங்கடமதுபிரசாத் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாரியம்மாள் என்பவர் ஆன்லைன் மூலமாக வழக்கு விண்ணப்பித்திருந்தார்.

அந்த விண்ணப்பத்தின்படி சென்னை கீழ்பாக்கம் மகளிர் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் அமுதா விசாரணையை தொடங்கினார். அந்த விசாரணையில் மாரியம்மாள் என்பவரும் வனிதா என்பவரும் இங்கு பணிபுரிவதாகவே தெரியவில்லை என்று காவல்துறை தெரிவிக்கிறது.

ஆனால் வனிதா, சுமித் காண்ட்ராக்ட் நிறுவனத்தின் மூலமாக சூப்பர் வைசராக பணிபுரிந்து வந்துள்ளார். அதற்கான வருகை பதிவும் உள்ளது. அதே இ.எஸ்.ஐ மருத்துவமனையில் விசாரித்தபோது, வேங்கடமதுபிரசாத் தங்களுடைய உடை பற்றியும், செயலைப் பற்றியும் ஆபாசமான வார்த்தைகளால் பேசுவார். அதேபோல மருத்துவமனையில் உள்ள அந்த குடியிருப்புக்கு இங்கு உள்ள பெண்கள் சென்று வருவார்கள்.

இந்த காரணத்தால் தான் இவரை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் இருக்கும் மத்திய அரசு குடியிருப்பில் தங்கக்கூடாது என ஆணையை பிறப்பித்துள்ளது. அதையும் மீறி இன்னும் அங்கே தொடர்ந்து தங்கிவருகிறார் என்றனர்.

டாக்டர் வெங்கடமதுபிரசாத்திடம் இதுதொடர்பாக கேட்டபோது, இந்த பாலியல் தொல்லை பற்றி காவல்த்துறை விசாரிக்கிறது. அவர்களிடமே கேளுங்கள் என்றார். மேலும் பேசிய அவர், இ.எஸ்.ஐ குடியிருப்பை விட்டு வெளியில் செல்ல ஆர்டர் வந்தது உண்மைதான். இவர்கள் சொல்லுவதை போன்று நான் அங்கு தங்குவதே இல்லை. எப்போதாவது இரவு நேரங்களில் மட்டுமே அவசரத்திற்கு தங்குவேனே தவிர, மற்றபடி நான் அங்கு தங்குவதே இல்லை. வழக்கு தொடுத்த மரியம்மாள் என்பவர் வயதானவர். ஆனால் அந்த வழக்கை தொடுத்துள்ளார். அதே போல வனிதா எங்கள் மருத்துமனையில் பணிபுரிகிறாரே தவிர, என்னிடத்தில் பணிக்கு வருவது என்பது பொய்யான தகவல். நான் பாலியல் தொந்தரவு கொடுப்பது என்பது வேண்டுமென்றே இட்டுகட்டுவது போல் உள்ளது என்றார்.

வெங்கடமதுபிரசாத்திடம் விசாரித்தபோது எடுத்த எடுப்பிலே இதை காவல்துறை விசாரிக்கிறது, அவர்களிடமே கேளுங்கள் என்று சொன்னதோடு, அதனை தொடர்ந்து வனிதா, மரியம்மாள் ஆகியோர் இங்குதான் பணிபுரிகிறார்கள் என்றும் கூறுகிறார். ஆனால் விசாரணை நடத்திய போலீஸ் தரப்போ, வனிதா, மாரியம்மாள் என்பவர்கள் இங்கு பணிபுரியவே இல்லை என்றும், இருவேறு கருத்து சொல்லப்படுவதால் காவல்துறை துணைபோகிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

staff hospital
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe